வீரப்பனுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவருடன் காட்டில் பயணித்ததாக கூறி வரும் முகில் என்பவர் கூறியுள்ளார். பாமகவினர் பெருமளவில் வீரப்பனின் புகைப்படத்தை தங்களது கட்சி கட்டவுட் களில் பயன்படுத்தி வரும் நிலையில் முகில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வீரப்பனுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவருடன் காட்டில் பயணித்ததாக கூறி வரும் முகில் என்பவர் கூறியுள்ளார். பாமகவினர் பெருமளவில் வீரப்பனின் புகைப்படத்தை தங்களது கட்சி கட்டவுட் களில் பயன்படுத்தி வரும் நிலையில் முகில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக கர்நாடக வனப்பகுதிகளை 15 ஆண்டுகளுக்கும் மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் வீரப்பன். அதிக அளவில் சந்தன மரங்கள் மற்றம் யானைத் தந்தங்களை கடத்தினார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது உள்ளது. சந்தன மரங்களை வெட்டி விற்றதால் சந்தன கடத்தல் வீரப்பன் என காவல்துறையினரால் அவர் அழைக்கப்பட்டு வந்தார்.
1990 முதல் 2000 கால கட்டங்களில் மிகவும் பிரபலமன வீரப்பனின் பெயர் சின்ன குழந்தைகளை கேட்டாலும் தெரியும், ஒல்லியான தேகம், முரட்டு மீசை, கையில் துப்பாக்கி இதுதான் வீரப்பனின் அடையாளம், தமிழகம் கேரளா என இரண்டு மாநில போலீசாருக்கும் வனப்பகுதியில் தண்ணிகாட்டிய பலே கில்லாடி வீரப்பன். 1952 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கோபி நத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தவர் அவர்,
தந்தங்களுக்காக யானையை வேட்டையாடி சந்தன மரங்களை வெட்டி கடத்தி பல வருடங்கள் கர்நாடகா, கேரளா, தமிழக அரசுகளுக்கு பெரும் சவாலாக இருந்தவர். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். 1972 ஆம் ஆண்டு சந்தனமர கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த அவர் ஒரு கட்டத்திற்கு பிறகு தனது செயலுக்கு குறுக்கே வருபவர்களை கொலை செய்ய ஆரம்பித்தார், அதில் பல வனத்துறை அதிகாரிகள், அவரைப்பற்றி துப்பு கொடுத்தவர்களும் அடங்குவர்.
இதையும் படியுங்கள்: இவர்களால் என் உயிருக்கு ஆபத்து… போலீஸ் பாதுகாப்பு வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் ஈபிஎஸ் மனு!!
2000 ஆண்டில் கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரை கடத்திய சம்பவம் தென்னிந்தியாவையே அதிரவைத்தது. பின்னர் நாகப்பாவை கடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, மூன்று மாநில போலீசாரும் வீரப்பனை பிடிக்க தேடுதல் வேட்டைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினரால் வீரப்பன் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டு உயிரிழந்த விவகாரம் இன்றளவும் மர்மமாகவே இருந்து வருகிறது. மோரில் விஷம் கலந்து கொடுத்து தான் வீரப்பனை கொன்றார்கள் என்ற பேச்சும் இருந்து வருகிறது.
இதையும் படியுங்கள்: 22 பட்டியல் இன ஊ.ம தலைவர்கள் தரையில் அமர்த்தப்படுகின்றனர்.. ஸ்டாலின் அரசை நாரடிக்கும் அண்ணாமலை.
இது ஒருபுறம் உள்ள நிலையில் வீரப்பனின் மறைவுக்குப் பிறகு அவரை சாதிரீதியாக அரசியல் கட்சிகள் உரிமை கொண்டாடி வருகின்றன, வீரப்பன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் எங்கள் சமூகத்திற்குரிய வீரம் அவரிடம் இருந்தது என என சுயசாதி பெருமைக்காக வீரப்பனை பயன்படுத்தி வருகின்றனர். அரசியல் நிகழ்ச்சி, ஊர் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகளிலும் கட்டவுட் அடித்து வருகின்றனர்,
இந்நிலையில் வீரப்பனுடன் காட்டில் பயணித்ததாக கூறும் முகில் வீரப்பன் காட்டில் எங்கெல்லாம் இருந்தார், அவர் காட்டில் இருந்தபோது சந்தித்த நெருக்கடிகள் என்ன, காட்டில் எப்படி பதுங்கி வாழ்ந்தார் என்பது போன்ற தகவல்களை யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
இதன்மூலம் பிரபலமாக அறியப்படும் முகில் தற்போது வீரப்பனை பாமகவினர் சாதிரீதியாக அடையாளப்படுத்தி வருவதை கண்டித்துள்ளார். யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியது பின்வருமாறு, காட்டில் அவருடன் பயணிக்கிற காலத்தில் வீரப்பன் ஒரு சாதி என்ற வட்டத்திற்குள் வந்ததே கிடையாது, நான் பிறந்த சாதிக்காரர்கள் என்னை காட்டிக் கொடுப்பதையே ஒரு வேலையாக வைத்துள்ளனர் என்று கூறியவர் வீரப்பன், இப்போதும் மிழகத்தில் சில அரசியல் வாதிகள் வீரப்பனை தங்களது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கின்றனர், அவர்கள் வீரப்பனை ஒரு சாதியை மையப்படுத்தி புகழ்ந்து பேசி வருகிறார்.
அவர் சார்ந்த சமூகத்தினர் நம்மை ஆதரிப்பார்கள் என்ற காரணத்திற்காகத்தான் சீமான் வீரப்பனை புகழ்ந்து பேசுகிறார். இதேபோல் இன்னொரு அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் வெளிப்படையாகவே சொல்கிறேன் பாமகவினர், வீரப்பனின் வாரிசுகள், வீரப்பனார் எங்களின் வீரம் என்று பறைசாற்றி பேசிக் கொண்டு வருகின்றனர், பொதுவாகவே வீரப்பனாருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, அவர் உயிரோடு இருந்தபோதும் சரி மறைந்த போதும் சரி எந்த தொடர்பும் இல்லை, அவர் அந்த காடுகளில் மறைந்திருந்த போது இவர்கள் ஒருவேளை கஞ்சி கொடுத்தவர்களா?
அவருக்கு ராகி களி கிண்டி கொடுத்தார்களா? பாப்பாரப்பட்டி என்ற இடத்திலேயே இறந்து கிடந்த போது, அவரது உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கைகளைப் பற்றி இவர்கள் பேசியது உண்டா? தர்மபுரி எங்கள் கோட்டை என்று சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் வீரப்பனார் இறந்த அன்று இவர்கள் எங்கே போனார்கள்ழ இவ்வாறு முகில் கேள்வி எழுப்பி உள்ளார்.