22 பட்டியல் இன ஊ.ம தலைவர்கள் தரையில் அமர்த்தப்படுகின்றனர்.. ஸ்டாலின் அரசை நாரடிக்கும் அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Aug 12, 2022, 2:02 PM IST

பட்டியல் இனத்தைச் சேர்ந்த 22 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலையில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இதுதான் சமூக நீதி ஆட்சியா என தமிழக அரசை விமர்சித்துள்ளார். 
 


பட்டியல் இனத்தைச் சேர்ந்த 22 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலையில் அமர்த்தப்படுகிறார்கள் என்றும் 20 ஊராட்சி மன்றத் தலைவர்கள் தேசிய கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டும் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இதுதான் சமூக நீதி ஆட்சியா என தமிழக அரசை விமர்சித்துள்ளார். 

இது  தொடர்பாக திமுக எழுப்பியுள்ள தீண்டாமைச் சுவர் என்ற பெயரில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:-  ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற தனது நடவடிக்கைகளின் மூலம் இந்நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: யாரையும் ஜாதி பார்த்து கைது பண்ணல.. கலவரம் பண்ணவங்களதான் பண்றாங்க, திருமாவளவனை எகிறி அடித்த எச்.ராஜா.

ஆனால் இங்கோ சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என்று மேடைக்கு மேடை பேசுவதும், தமக்குத்தாமே சமூகநீதிக் காவலர் என்ற பட்டங்களை சூட்டிக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர் திமுக தலைவர்கள். சமீபத்தில் சின்னசேலம் வட்டம் எடுத்தவாய்நத்தம் ஊராட்சி தலைவர் திருமதி. சுதா வரதராஜ் அவர்கள் ஒரு பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தைச் சொல்லி சுதந்திர தினத்தன்று நமது தேசியக் கொடியை ஏற்ற அவருக்கு அனுமதி மறுக்கப் பட்டதாக செய்திகள் வந்தது.

இதையும் படியுங்கள்: சென்னையில் உணவு திருவிழா...! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பீஃப் பிரியாணி..விளக்கம் அளித்த அரசு அதிகாரிகள்

இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருடன் நமது மாநில துணைத்தலைவர் எம்.சி சம்பத் அவர்கள் திருமதி சுதா வரதராஜ் அவர்களை நேரில் சந்தித்த பிறகு இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊராட்சி தலைவர் திருமதி சுதா வரதராஜன் அவர்கள் சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றலாம் என்று தீர்வு எட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் நடத்திய கணக்கெடுப்பில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.

24 மாவட்டங்களில் 386 ஊராட்சிகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. அதுமட்டுமல்லாது 22 ஊராட்சிகளில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அமர இருக்கை மறுக்கப்பட்டு தரையில் அமர்த்தப்படுகிறார்கள். 42 ஊராட்சிகளில் ஊராட்சி தலைவர்களின் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது

இங்கு அமர்ந்து கொண்டு உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது பீகாரில் என்ன நடக்கிறது என்று விவாதித்துக் கொண்டிருக்கும் சிலர் தமிழகத்தில் சம உரிமையோடு அனைத்து மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்ற மாயையில் இருக்கிறார்கள் திமுக ஆட்சியில் சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது என்பதை சமீப காலமாக நடக்கும் பல சம்பவங்கள் உறுதிப்படுத்தியுள்ளது வர அண்ணாமலை தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

click me!