அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

By vinoth kumar  |  First Published Aug 12, 2022, 7:42 AM IST

நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், விஜயபாஸ்கர், அன்பழகன் உள்ளிட்டோர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு... விசாரணைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!!

இந்நிலையில், நாமக்கல் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாலை முதலே சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையானது நாமக்கல்லில் 24 இடங்களிலும், மதுரை மற்றும் திருப்பூர்  தலா ஒரு இடத்திலும் சோதனை நடைபெறுகிறது. வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வருமானத்தை விட 315 சதவீதம் கூடுதல் சொத்து சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;- நாமக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி.உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட 315% அதிகமாகும். எனவே இது சம்பந்தமாக அவர்கள் மீது 11.08.2022ஆம் தேதி நாமக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு குற்ற எண்.1/AC/2022 பிரிவு 13(2) r/w 13(1) (e) of PC Act 1988, 109 r/w 13(2) r/w 13(1) (e) of PC Act 1988 and 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018 மற்றும் பிரிவு 12 r/w 13(2) r/w 13(1)(b) of the PC Act 1988 as amended in 2018-ன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்துவருகிறது. 

இதையும் படிங்க;- மாஜி அமைச்சர்கள் வீடுகளில் திமுக அரசின் ரெய்டு ஏன்..? காரணத்தை சொல்லி பொளந்து கட்டும் பொள்ளாச்சி ஜெயராமன்.!

click me!