இவர்களால் என் உயிருக்கு ஆபத்து… போலீஸ் பாதுகாப்பு வேண்டும்… டிஜிபி அலுவலகத்தில் ஈபிஎஸ் மனு!!

By Narendran S  |  First Published Aug 12, 2022, 4:33 PM IST

தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு கோரியும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். 


தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு கோரியும் சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை பூதகரமாக மாறியதை அடுத்து எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து இருவரும் தங்களது ஆதரவாளர்களை திரட்டி தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: 22 பட்டியல் இன ஊ.ம தலைவர்கள் தரையில் அமர்த்தப்படுகின்றனர்.. ஸ்டாலின் அரசை நாரடிக்கும் அண்ணாமலை.

Tap to resize

Latest Videos

அவருக்கு வழி நெடுக ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள். இதுவரை 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, சுதந்திர தினத்துக்கு பிறகு மீண்டும் திருச்சி மற்றும் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தை தொடர இருக்கிறார். ஓபிஎஸ் தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியும் அவருக்கு போட்டியாக தென் மாவட்டங்களில் சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதையும் படிங்க: போதை இல்லா தமிழகம் சொன்னா மட்டும் போதாது செயலில் காட்டுங்கள் முதல்வரே.. விஜயகாந்த் அதிரடி சரவெடி..!

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சுற்றுப்பயணத்தின் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஏ.பி.மணிகண்டன், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நபர்கள் மற்றும் ஏனைய சமூக விரோதிகளால் எடப்பாடி பழனிசாமி உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. எனவே அவருடைய பாதுகாப்பை அதிகரித்து உரிய உச்சபட்ச போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!