ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும் ஆனால் டிஜிபியிடம் இருந்து அது வருவதே இல்லை.. நீதிபதி வேதனை.

By Ezhilarasan BabuFirst Published Aug 12, 2022, 6:21 PM IST
Highlights

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையிலும் ஆங்கிலேயர்களின்  ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். 

நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையிலும் ஆங்கிலேயர்களின்  ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும் ஆனால் அந்த வார்த்தை  அரசிடமிருந்தோ, காவல்துறை  தலைவரிடமிருந்தோ வருவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

பல ஆண்டுகாலமாக தமிழக காவல் துறையில் ஆர்டர்லி என்ற அடிமை முறை இருந்து வருகிறது.  காவல்துறை உயரதிகாரிகள் தங்களது அதிகாரத்திற்கு ஏற்ற அளவில் தங்கள் கீழ் உள்ள போலீசாரை தங்களது வீடுகளில் காய் கறி வாங்கிவர, தங்கள் பிள்ளைகளை பள்ளிக் கூடம் கூட்டிச் செல்ல, துணி துவைக்க போன்ற வேலைக்கு பயன்படுத்தி வருவதே ஆர்டர்லி முறை ஆகும். இதனால் பல காவல் நிலையங்களில் ஆட் பற்றாக்குறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்… எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர்!!

இந்நிலையில் ஆர்டர்லி முறைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். காவல்துறையில் பணியாற்றும் யூ.மாணிக்கவேல் என்பவர் இடமாற்றம் செய்யப்பட்டதைடுத்து அவருக்கு ஒதுக்கப்பட்ட காவலர் குடியிருப்பில் இருந்து இடத்தை காலி செய்யும்படி கடந்த  2014ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்த நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் 2014 ஆம் ஆண்டிலேயே அவரது இடத்தை காலி செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்ததும் அவர் காலி செய்யாமல், தற்போதுதான் காலி செய்துள்ளார்.

இதையும் படியுங்கள்:  வீரப்பனுக்கும் பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... உண்மையை போட்டு உடைத்த முகில்.

ஏன் அது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். உயர் அதிகாரிகள் அவர்களின் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால் நன் மதிப்பை இழக்க நேரிடும் என்றார். மேலும் ஆர்டர்லிக்கு எதிராக வழக்கும் விசாரணைக்கு வந்தது, அப்போது அது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி, இதுவரை 19 ஆர்டர்லிகள்தான் திரும்பப் பெறப்பட்டு உள்ளனரா என கேள்வி எழுப்பினார், அதிகாரிகள் மட்டும் ராஜா ராணிகள் அல்ல, அனைத்து குடிமக்களும் ராஜா ராணிக்கள்தான் அதிகாரிகள் என்பவர்கள் மக்கள் சேவகர்கள் தான்,

முதன்மைச் செயலாளர் முறையாக செயல்பட வேண்டும், உத்தவுகள் மட்டும் போதாது, நடவடிக்கைகள் அவசியம், மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கிற காவல்துறைக்கு ஒழுக்கம் அவசியம், இடத்தை காலி செய்ய சொன்னால் உடனே காலி செய்திருக்க வேண்டும்.  75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில் இன்னும் ஆங்கிலேயர்களின் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது, வேதனையானது, ஆடலின் முறையை ஒழிக்க ஒரே ஒரு வார்த்தை போதும், ஆனால் அது அரசிடமிருந்தோ, காவல்துறை தலைவரிடம் இருந்தோ வருவதில்லை என்றார்.

ஆர்டர்லி வைத்திருக்கக் கூடாது என தமிழக உள்துறை முதன்மை செயலாளர் உத்தரவை பின்பற்ற வில்லை என்றால் ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தார். 
 

click me!