அண்ணாமலை ஒரே பாட்டுல CM ஆகணுமா.? மாதம் 50 ஆயிரம் கொடுத்தா மாநிலப் பொறுப்பு... டாரா கிழித்த மைதிலி.

By Ezhilarasan BabuFirst Published Aug 24, 2022, 2:03 PM IST
Highlights

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரே பாட்டில் முதல்வராக பார்க்கிறார் என பாஜகவில் இருந்து வெளியேறிய  அக்கட்சியின் முன்னாள் மகளிரணி செயலாளராக இருந்த மைதிலி வினோ கூறியுள்ளார். 

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரே பாட்டில் முதல்வராக பார்க்கிறார் என பாஜகவில் இருந்து வெளியேறிய  அக்கட்சியின் முன்னாள் மகளிரணி செயலாளராக இருந்த மைதிலி வினோ கூறியுள்ளார். பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பாஜகவில் பொறுப்பு வழங்கப்படுகிறது என்றும், மாதம் 50 ஆயிரம் செலவு செய்தால்தான் அக்காட்சியில் மாநில பொறுப்பு என்றும் பாஜகமீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பாஜக திமுக இடையே கடும் மோதல் இருந்து  இருந்து வருகிறது, அதிலும் குறிப்பாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது, தமிழக அரசியலில் இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகின்றனர், இந்நிலையில் பாஜகவின் மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி வினோ சமீபத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்தார், அதற்கான புகைப்படம் சமூக வலை தளத்தில் வெளியானது திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியானது, இந்நிலையில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார் என கூறி அவரை கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்;  மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கு பள்ளி வேன் கொடுக்க வேண்டும்.? கல்வித்துறை சுற்றறிக்கையா? அண்ணாமலை ஆவேசம்

இது பாஜகவிலிருந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் மைதிலி  வினோ பாஜக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள அவர், கடந்த 1999ஆம் முதல் பாஜகவின் பணியாற்றி வருகிறேன், தாமரை சின்னம் என்றால் தமிழகத்திற்கு என்னவென்றே அப்போது தெரியாது, ஆனால் கட்சியில் இணைந்து மிக கடுமையாக உழைத்து படிப்படியாக மாவட்ட மகளிர் அணி, மாநில மகளிர் அணி என பல்வேறு பொறுப்புகளை  பெற்றேன், ஆனால் கட்சிக்கு உழைத்தவர்களுக்கு சமீபகாலமாக கட்சியில் மரியாதை இல்லை, பணம் படைத்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுகிறது, 100 கோடி 200 கோடி வைத்திருப்பவர்களை தேடி பொறுப்பு கொடுக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்;  Zomato ஊழியரை செருப்பால் தாக்கி ஆணவம்.. இயலாமையில் கைக்கட்டி நின்ற டெலிவரி பாய்.. வைரல் வீடியோ.

பணம் வைத்திருப்பவர்கள் நாளைக்கு கட்சிக்கு வந்தால் அவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது, ஆனால் பல ஆண்டு காலமாக கட்சிக்கு உழைத்தவர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள், செந்தில் பாலாஜியை சந்திப்பதற்காக நான் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக அறிக்கை வெளியிடுகிறார்கள், ஒரு அமைச்சரை சந்திக்கக்கூடாதா, அப்படி சந்தித்தால் உடனே அவர்கள் கட்சியில் சேர்கிறேன் என்று அர்த்தமா? அப்படி இருந்தாலும் நான் செந்தில் பாலாஜியை சந்தித்த காரணத்திற்காக நீக்கப்படுகிறேன் என்றுதானே அறிக்கையில் சொல்ல வேண்டும்,

கட்சிக்கு கலகம் ஏற்படுத்திவிட்டதாக ஏன் சொல்கிறார்கள், நான் கட்சிப் பணத்தை கையாடல் செய்து களங்கம் ஏற்படுத்தி விட்டேனா? இதற்கு பாஜக விளக்கம் அளிக்க வேண்டும், சமீபகாலமாக கட்சியின் செயல்பாடுகள் சரியில்லை என்ற காரணத்தினால்தான் கட்சியில் இருந்து விலகும் முடிவுக்கே வந்தேன், பாஜக என்ற கட்சி ஜெயிக்காது என்று தெரிந்திருந்தும் நாங்கள் அக்காட்சியில் வேட்பாளராக களம் இறங்கி பணத்தைச் செலவு செய்துள்ளோம், எந்த எதிர்பார்ப்பில் நாங்கள் அதை செய்தோம், கட்சியின் மீது இருக்கிற விசுவாசத்தினால் தான் செய்தோம், பாஜகவில் மாநில பொறுப்பு பெற வேண்டுமென்றால் அவர்கள் மாதம் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்,

மாவட்ட பொறுப்பு என்றால் மாதம் 20 ஆயிரம் செலவு செய்ய வேண்டும், மண்டல பதவிகள் என்றால் 5 ஆயிரம்  முதல் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும்,  அப்படி என்றால் அங்கு கொள்கை எங்கே போனது, அண்ணாமலை சார் அவர்கள் ஒரே பாட்டில் முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என கனவு காண்கிறார், பணம் படைத்தவர்கள் பதவி என்ற நிலை உருவாகியிருக்கிறது, எதேச்சதிகாரபோக்கு, சுயநலமாக முடிவு எடுக்க தொடங்கியுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் போராட்டங்களில் கூலிக்கு ஆட்களை அழைத்து வந்து கூட்டத்தை காட்டுகிறார்கள். பலர் என்னைத் தொடர்பு கொண்டு சரியான முடிவு எடுத்திருக்கிறீர்கள், நாங்கள்தான் முடிவு எடுக்க முடியாமல் தவித்து வருகிறோம் என புலம்புகின்றனர். நான் சொல்கிறேன் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை, இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

click me!