மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கு பள்ளி வேன் கொடுக்க வேண்டும்.? கல்வித்துறை சுற்றறிக்கையா? அண்ணாமலை ஆவேசம்

Published : Aug 24, 2022, 02:01 PM IST
மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் விழாவிற்கு பள்ளி வேன் கொடுக்க வேண்டும்.? கல்வித்துறை சுற்றறிக்கையா? அண்ணாமலை ஆவேசம்

சுருக்கம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வர வாகனங்களை வழங்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.  

கொங்கு மண்டலத்தில் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் கொங்கு மண்டலத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று விமானம் மூலம் கோவை வந்த முதலமைச்சருக்கு கோவை நகரம் முழுவதும் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை  கோவை ஈச்சனாரி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்டத்தில் புதிதாக 662 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 748 பணிகளுக்கு  அடிக்கல் நாட்டினார். மேலும்  ஏற்கனவே முடிக்கப்பட்ட 271 கோடி ரூபாய் மதிப்பிலான  228 திட்டங்களை துவக்கி வைத்தார்.மகளிர் சுய உதவி குழு,பள்ளி மற்றும் கல்லூரி கல்வி,சமூக நலத்துறை,வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 1,07,410 பேருக்கு சுமார் 589 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனையடுத்து இன்று மாலை திருப்பூரில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் நாளை திருப்பூரில் சிறு, குறு நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார்.  இதனையடுத்து கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் நாளை மறுதினம் ஈரோட்டில் நடைபெறவுள்ள அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளார்.

சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

பொதுக்கூட்டத்திற்கு பள்ளி வாகனங்களா..?

இந்த கூட்டங்களில் பொதுமக்கள் அதிகமானோர்களை பங்கேற்க்க வைக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து அரசு நிகழ்ச்சி மற்றும் திமுக பொதுக்கூட்டங்களுக்கு பேருந்து மற்றும் வேன் மூலாமக அழைத்து வரப்படுகின்றனர். இந்தநிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

 <

/p>

இன்று கோவையிலும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவிற்கு மக்களை அழைத்து வர அனைத்து பள்ளி வாகனங்களைக் கொடுக்குமாறு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக அறிகிறேன். திமுகவின் கூட்டங்களுக்கு ஆட்பிடிப்பு வேலை செய்வதுதான் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை பணியா? மாற்று வாகனங்களில் மாணவர்கள் பயணிக்கும் போது அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு இந்த அரசு பொறுப்பேற்குமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

இதையும் படியுங்கள்

15 மாதங்களில் 5 வது முறையாக கோவைக்கு வந்துள்ளேன்...! என்ன காரணம் தெரியுமா..? முதலமைச்சர் பேச்சு

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!