சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

Published : Aug 24, 2022, 12:54 PM IST
சொந்த கட்சியில் அதிகார மோதல்...! கையாலாகாத தனத்தை திசை திருப்ப திமுக மீது குற்றச்சாட்டு- மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சுருக்கம்

இனமானம், தன்மானம் பற்றி கவலைப்படாதவர்களிடம் நல்ல பெயர் வாங்குவதைப் பற்றி எனக்கு கவலை இல்லையென தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்மானம் இனம் மானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம் தான் திமுக அரசை விமர்சிப்பதாகவம் குற்றம்சாட்டினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை, திருப்பூர், ஈரோடு அகிய மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு இச்சாணி கல்லூரி வளாகத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து பேசியவர்,  திமுக ஆட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி, திமுக ஆட்சி அடக்கப்பட்டவர்களை அரவணைத்து செல்லுகின்ற ஆட்சி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆட்சி என கூறினார்.  எல்லோருக்கும் எல்லாம் என்கின்ற சமநிலை சமதர்ம சமுதாயத்தை அமைக்கக்கூடிய அரசு தான் திமுக அரசு  என கூறினார். 

அமைச்சர் அன்பில் மகேஷிடம் வசமாய் சிக்கிய பள்ளி மாணவர்கள்.. உடனே ஆசிரியரை கூப்பிட்டு என்ன செய்தார் தெரியுமா?

விமர்சனத்தில் வளர்ந்தவன் நான்

வாக்களித்தவரும் பாரட்டும் வகையில்  நம் அன்றாட செயல் அமைய வேண்டும் என நினைப்பவன் நான், இதை வைத்து தான் திமுக அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கடமையை செய்ய வேண்டும் தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டுள்ளேன். எனது கொளத்தூர் தொகுதியைப் போல மற்ற அனைத்து தொகுதிகளிலும் எவ்வாறு கண்காணித்து கொண்டு உள்ளேன் என அனைவருக்கும் தெரியும், நேற்று கூட அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளேன். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை 234 தொகுதிக்கு விரிவு படுத்தியுள்ளதாகவும் கூறினார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை இது ஒரு முன்னோடி திட்டம் எனவும் தெரிவித்தார். இது திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கோ, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லை அதிமுக, பாஜக என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தான் கூறினார். திமுகவின் கொள்கைகளும், கோட்பாடுகளும், சிந்தனைகளும் நிறைவேறி விடக்கூடாது என்று நினைப்பவர்கள் மட்டும் தான் திமுக அரசை இன்று விமர்சித்து வருகிறார்கள் என கூறினார். தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை விமர்சிப்பதை கவலை இல்லை ஏனென்றால் நான் விமர்சனத்தில் வளர்ந்தவன், எதிர்ப்பையும் அடக்கு முறையை மீறி வளர்ந்தவன் நான் என தெரிவித்தார். 

போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் 5 மடங்கு உயர்வா..? வரிக்கு மேல் வரி... மக்களை வாட்டி வதைக்கும் திமுக- ஓபிஎஸ்

சொந்த கட்சியில் பிரச்சனை

யாராவது இப்படி எதிர்த்தால் தான் மேலும் மேலும் உற்சாகமாக செயல்படுவேன், அதே நேரத்தில் எதிர்ப்பதன் மூலமாக தமிழக வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். விமர்சனங்களை விரும்புபவன் தான் நான் ஆனால் விதண்டாவாதங்களை அல்ல, வழிகாட்டுதலை ஏற்றுக் கொள்பவன் தான் நான், ஆனால் பயனற்ற சொற்களை அல்ல என கூறினார். சொந்த கட்சியில் நடைபெறும் அதிகார போட்டியில் தங்களது கையாலாகாத தனத்தை  மறைக்க, திசை திருப்ப  திமுக அரசை இன்றைக்கு விமர்சிக்கிறார்கள். திமுக அரசே விமர்சிப்பதற்கு தகுதியோ, யோக்கியதையோ எதுவும் அவர்களுக்கு இல்லை.
ஓராண்டு காலத்தில் ஓராயிரம் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளிலே பல திட்டங்கள் நிறைவேற்றி உள்ளோம்,  ஐந்தாண்டுகளில் இந்தியாவிலேயே முதன்னை மாநிலமாக,  உலகத்திலேயே அனைத்து வளம் கொண்ட  மாநிலமாக தமிழகம் மாற்றப்படும் அது தான் தனது  லட்சியம் என கூறினார்.  

இதையும் படியுங்கள்

15 மாதங்களில் 5 வது முறையாக கோவைக்கு வந்துள்ளேன்...! என்ன காரணம் தெரியுமா..? முதலமைச்சர் பேச்சு

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!