மின் வாரிய முறைகேடு தொடர்பாக புகார் தெரிவித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது தைரியமான ஆண் மகனாக இருந்தால் வழக்கு தொடருங்கள் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பாஜக நிர்வாகி நாரயணன் திருப்பதி சவால் விடுத்துள்ளார்.
திமுக-பாஜக மோதல்
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக ஆட்சி அமைத்த கடந்த 14 மாதங்களில் திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதே நேரத்தில் திமுக அரசு மீது பாஜக தொடர் ஊழல் மற்றும் முறைகேடு புகார் தெரிவித்துள்ளது. மின்சார வாரியத்தில் டெண்டர் விவகாரத்தில் திமுக அமைச்சர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின்திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். மேலும், பேப்பரில் இயங்கும் நிறுவனத்திற்கும் திமுகவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழக ஆளுநரிடம் அண்ணாமலை மின் வாரிய முறைகேடு தொடர்பாக புகாரும் தெரிவித்திருந்தார்.இதன் காரணமாக கடும் அதிருப்தி அடைந்த நிலையில் திமுக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தது.
இருந்த போதும் திமுக- பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே இருந்தது. இதனையடுத்து முதலமைச்சர் குடும்பத்தோடு துபாய் பயணம், கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டசத்து, ஆகியவற்றை விமர்சித்து இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தநிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மின்சார வாரியத்தில் ஊழல் நடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்த நிலையில், தைரியமிருந்தால், ஆம்பிளையாக இருந்தால்,நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்' என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
பி ஜி ஆர்,பொங்கல் தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஊழல்களை வெளிப்படுத்திய போதெல்லாம், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும்,அவதூறு வழக்கு தொடுப்பதாகவும் கூறி விட்டு ஓடி ஒளிந்தவர்கள் தைரியசாலிகளா? ஆம்பிளைகளா? என கேள்வி எழுப்பியுள்ளார். தைரியமிருந்தால்,ஆம்பிளையாக இருந்தால் பாஜக மாநில தலைவர் மீது வழக்கு தொடர்ந்து பாருங்கள். யார் தைரியசாலி, ஆம்பிளை என்பது தெரிந்துவிடும் என நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்