தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டரோ அன்றில் இருந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்கு இடையான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி. அவரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா கூறியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி எப்போது நியமிக்கப்பட்டரோ அன்றில் இருந்து தமிழக அரசுக்கும், ஆளுநருக்கு இடையான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் குரல் எழுப்பி வருகின்றனர். மற்றொருபுறம் ஆளுநருக்கு ஆதரவாக பாஜகவினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- உனக்கு என்னப்பா நீ பைத்தியம் நீ என்ன வேணாலும் பேசுவ.. எச்.ராஜாவை டரியில் ஆக்கிய சீமான்.
இந்நிலையில், கீழடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா;- தனித்தமிழ்நாடு குறித்து ஏற்கனவே பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு தேச துரோகி. முதல்வர் ஸ்டாலின் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். சட்டபேரவையில் ஆளுநர் உரையின் போது அவர் மட்டுமே பேச வேண்டும் என்பது மரபு. ஆனால், அதற்கு மாறாக முதல்வர் பேசியது மரபு அல்ல. இந்த மாதிரி ஏற்பு இல்லாத விஷயங்களை ஆளுநர் படிக்காமல் தவிர்ப்பது என்பது புதிதல்ல.
இதையும் படிங்க;- கருணாநிதியை விட ஸ்டாலின் பயங்கரமானவர்.. இதை செய்ய முதல்வருக்கு தைரியம் இருக்கா? திமுகவை அலறவிடும் H.ராஜா.!
ஏற்கனவே ஆந்திரா, கேரளாவில் ஆகிய மாநிலங்களில் பேசியுள்ளனர். ஊழல் அரசாங்கத்தை பற்றி உரையில் கூறமால் தவிர்த்துவிட்டு சென்றதற்கு ஆளுநருக்கு முதலமைச்சர் நன்றி தெரிவிக்க வேண்டும் என எச்.ராஜா ஆவேசமாக தெரிவித்தார். மேலும், தேசிய கீதத்தை மதிப்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பாடம் எடுக்க வேண்டாம். தமிழகத்தில் முழுமையாக குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரவேண்டியதில்லை. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வரலாம். நான் ஏற்கனவே ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதி என கடந்த ஆண்டு சொன்னதை தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய ஸ்டாலின் நிரூபித்து வருகிறார்.