தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து ஆளுநர் பாதியில் வெளியேறிய நிலையில், திமுக சார்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழக அரசும் ஆளுநரும்
தமிழக சட்டப்பேரவை கூட்டம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையோடு நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஆளுநருக்கு திமுக கூட்டணி கட்சிகளாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் பாமக எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இதனையடுத்து தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, அமைதிப்பூங்கா,சமூகநீ்தி, சுயமரியாதை,பெரியார், அண்ணல்அம்பேத்கர்,பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதன் காரணமாக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் அதிர்ச்சி அடைந்தன.
வரலாற்றிலேயே இல்லாத சம்பவத்தை ஸ்டாலின் செய்துள்ளார்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!
பாதியில் வெளியேறிய ஆளுநர்
இதனையடுத்து ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டசபை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தன.
போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய திமுக
தமிழகத்தில் இருந்தும் ஆளுநர் வெளியேற வேண்டும் என்றும் தேசிய கீதத்தை ஆளுநர் மதிக்கவில்லையென புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் Get Out Ravi என்ற வாசகத்தோடு திமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் டுவிட்டரில் நம்பர் 1 டிரெண்டிங் என பதிவிட்டு இதனை பதிவு செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்