கடந்த 2021-ல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்தார். இந்த விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்று பதிவிட்டிருந்தார்.
யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்குகளை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து விசாரணையை தொடர உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ல் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் மரணமடைந்தார். இந்த விபத்தை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காஷ்மீராக மாறி வருகிறது என்று பதிவிட்டிருந்தார். தமிழ்நாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் மாநில அரசுக்கு எதிராகவும் முப்படைகளின் தலைமை தளபதி ஹெலிகாப்டர் விவகாரத்தைப் பற்றி கருத்து தெரிவித்து பதிவிட்டிருந்ததாக திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.
இதையும் படிங்க;- பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா..? கட்சியில் இருந்து விலகுகிறார்களா..? நடிகை குஷ்பு புதிய விளக்கம்
இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் மாரிதாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து காவல் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா மற்றும் சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தொடர்பான புலன்விசாரணைக்கு தமிழக காவல்துறைக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் மாரிதாஸ் மீதான கிரிமினல் வழக்கு 4 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் மாரிதாஸ் மீதான வழக்கை விசாரிக்கவும் எந்தவித தடையும் கிடையாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க;- அரசியலில் அண்ணாமலை வளர்ந்து கொண்டிருக்கிறார்.. அதுக்கு இதுவே சாட்சி.. ஜெ. உதவியாளர்..!