ஆளுநர் பேச்சுக்கு தடங்கல்..! மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்திடுக..! சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த பாஜக

Published : Jan 10, 2023, 08:10 AM IST
ஆளுநர் பேச்சுக்கு தடங்கல்..! மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்திடுக..! சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்த பாஜக

சுருக்கம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போது குறுக்கீடு செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில துணை தலைவர் நாரயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.  

ஆளுநர் பேச்சுக்கு எதிர்ப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தனது உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்க தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு எங்கள் நாடு என முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து  சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர்கள் இருக்கையையும் முற்றுகையிட்ட பின்னர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தனது உரையை வாசிக்க தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு,அமைதி பூங்கா,பெரியார்,அண்ணா அம்பேத்கர் போன்ற வார்த்தைகளை பேச மறுத்து அடுத்த பகுதிக்கு சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநர் பேச்சுக்கு பிறகு அரசு ஒப்புதல் பகுதி  மட்டுமே அவை குறிப்பில் ஏற்றப்படும் என தீர்மானம் கொண்டு வந்தார்.  இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து  பாதியிலேயே ஆளுநர் ரவி வெளியேறினார்.

வரலாற்றிலேயே இல்லாத சம்பவத்தை ஸ்டாலின் செய்துள்ளார்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து!!

அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத்தையும், தேசிய கீதத்தையும் ஆளுநர் அவமதித்துவிட்டதாகவும் விமர்சித்து வருகின்றனர்.இது தொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியீட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175, 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்து கொள்ளப்பெறும்".

 

முதலமைச்சர் மீது நடவடிக்கை

இதனடிப்படையில், இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின்  மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும் அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா? நாராயண திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

யூடியூபர் மாரிதாஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.. விரைவில் கைதாகிறார்?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!