தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக அறிவித்த ஆளுநரின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிற திரும்பப் பெறப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 1979ல் உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதி பசில் அலி அளித்த தீர்ப்பில், ஆளுநருக்கு அதிகாரம் இருக்கு என்று குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதாக அறிக்கை விட்டிருந்தார்.
அதன் பிறகு நிறுத்தி வைத்தார். இதற்கு முதல்வர், அமைச்சர்கள் என பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். ஆளுநர் ஆலோசனைக்கு பிறகு இதில் ஒரு முடிவு எடுப்பார். எதிர்கட்சியாக இருந்த போது விஜயபாஸ்கர் அவரகளை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சொல்லிருக்கிறார். வரம்புக்கு மீறி ஊழல் செய்ததாக பல்வேறு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கடனை கட்டுவதில் தாமதம்: அடாவடி செய்த நிதி நிறுவன ஊழியர்கள் முன் கூலி தொழிலாளி தற்கொலை
முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை ஏன் காப்பாற்றுகிறார்? ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் சட்டபடி எடுப்பார். எடுக்கவும் வேண்டும். ஆளுநர் தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. நிறுத்தி தான் வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம். தமிழ்நாட்டில் அமைச்சர்கள் பலரின் மீது ஊழல் வழக்கு உள்ளது.
புதிதாக பொறுப்பேற்ற டி.ஜி.பி மற்றும் தலைமை செயலாளர் மற்றும் சென்னை காவல்துறை ஆனையர் அவர்களுக்கு வாழ்த்துகள். நேர்மையாக பணியாற்றுவார்கள் என்று நம்புகிறேன். பாஜக தொண்டர்களை கைது செய்யாமல் மக்கள் பணியாற்ற வேண்டும். கல்குவாரி விவாகரத்தில் அரசு அவர்களை அழைத்து பேச வேண்டும். குறிப்பாக கரூரை பொறுத்தவரை அதிமுக குவாரி, திமுக குவாரி, பாஜக குவாரி என பிரித்து வைத்திருக்கிறார்கள். யார் ஆட்சிக்கு வருகிறாரகளோ அவரகள் மற்ற குவாரிக்கு இடஞ்சல் கொடுப்பார்கள்.
பணம் இல்லாத ஒரே காரணம்; டிராக்டர் ஓட்டும் பட்டதாரி பெண் - படிப்பை தொடர முடியாத அவலம்
சிதம்பரம் கோவில் விவாகரத்தை பொறுத்தவரை, கனகசபை மீது யாரும் ஏறக்கூடாது என்று அங்குள்ள தீட்சிதர்கள் சொல்கிறாரக்ள். மாநில அரசு தீட்சதர்கள் விஷயத்தில் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது. அப்படி தொந்தரவு கொடுத்தால் நானே அங்கு சென்று போராடுவேன். செந்தில் பாலாஜி விவாகரத்தில் கடந்த இரண்டு வாரம் முதல்வர், அவரை காப்பற்றுவதற்காக எடுக்கும் நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாரி செல்வராஜ் பல முக்கிய கருத்துகளை படத்தில் சொல்லியிருக்கிறார். நான் நிஜத்தில் கூட நடிக்க மாட்டேன். எனக்கு நடிப்பு வராது. யார் நினைத்தாலும் அரசியலுக்கு வரலாம். படத்தில் ஒருவர் புகைபடிக்கிறார் என்றால் அது சென்சார் கட்டுபாட்டோடு தான் வருகிறது. படத்தில் புகைபிடிப்பதை பார்த்து பலர் புகைபிடிபார்கள் என்று சொல்வதை நான் ஏற்றுகொள்ள மாட்டேன் என்றார்.