சர்ச்சை பேச்சுகளுக்கு புகழ்ப்பெற்ற திமுக எம்.பி ஆ.ராசா தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசியலில் வளர்ந்த விதத்தை ஒப்பிடும் விதத்தில் பேசுகிறேன் என்று திமுக எம்.பி ஆ.ராசா பேசிய வார்த்தைகள் பலத்த சர்ச்சையை உண்டாக்கியது.
முதல்வரின் பிறப்பையும், தாயாரையும் அவதூறாகப் பேசுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டிக்க, ஆ.ராசா அதற்கு தன்னிலை விளக்கம் கொடுத்து வெட்டியும் ஒட்டியும் தவறாகச் சித்தரித்துள்ளதாக விளக்கம் அளித்தார். ஆனாலும், திமுக தலைமை அதைக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவியது.
மேலும் செய்திகளுக்கு..விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!
இந்நிலையில் தற்போது இந்துக்கள் பற்றி சர்ச்சை கருத்தை ஒன்று தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அந்த காணொளியை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘திமுகவை சேர்ந்த எம்.பி ஆ.ராசா ஒரு சமூகத்தை தவறாக பேசி, மற்றவர்களை திருப்திப்படுவதற்காக பேசி கொண்டிருக்கிறார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இத்தகைய தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுகவின் சார்பில் நாமக்கல்லில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆ.ராசா, ‘தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார். ஆனால், பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதில் இருந்து விலகி ஜனநாயகத்துக்காக, இந்திய ஒருமைப்பாட்டுக்காக, இந்தியா வாழ்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்.
மேலும் செய்திகளுக்கு..வேறு சாதி பையனை காதலித்த மகள்.. மறுத்த தந்தை எடுத்த விபரீத முடிவு - காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்
Sorry state of political discourse in Tamil Nadu. MP has yet again spewed hatred against one community with the sole aim of appeasing others.
Very very unfortunate mindset of these political leaders who think they own Tamil Nadu. pic.twitter.com/UntspDKdQ3
சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள் என ஆ. ராசா பேசியிருக்கிறார்.
இந்துக்களின் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் வன்மத்தை கக்குவது சரியா ? என்றும், இவர் தவறாக பேசும் இந்துக்களின் வாக்குகள் திமுகவிற்கு வேண்டாம் என்று கூற முடியுமா ? என்றும், முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா ? என்றும் சமூக வலைத்தளங்களில் ஆ.ராசாவையும், திமுகவையும் கடுமையான வார்த்தைகளில் பதிலடி கொடுத்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்