ஆவின் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆவின் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழகத்தை விட்டு வெளியே செல்ல உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். காவல்நிலையத்திற்கு உட்பட்ட இடத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை தளர்த்த கோரி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார்.
இதையும் படிங்க: சொந்த தொகுதியில் வெற்றிபெற வக்கு இல்ல.. திமுக ஆட்சியை கலைப்பியா..?? அண்ணாமலையை டரியல் ஆக்கிய கேசிஆர்.
அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், எனவே தனக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கோரியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர் வெளியிடங்களுக்கு செல்ல அனுமதித்தால் ராஜேந்திர பாலாஜி வழக்கின் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் கலைக்க நேரிடும் என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் ஜே.பி. பார்திபாலா விசாரணை அதிகாரியிடம் தெரிவித்த பிறகு தமிழ்நாட்டிற்கு உட்பட்ட இடங்களுக்கு ராஜேந்திரபாலாஜி செல்லலாம் என்று தகவல்கள் அளித்தனர்.
இதையும் படிங்க: விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!
அதேநேரத்தில் தமிழ்நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். காலாவதி ஆகிவிட்ட ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போர்ட்டை புதுப்பித்தாலும் அவற்றை அவரிடம் வழங்கக்கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி சாட்சியங்களை கலைக்க முயற்சிக்ககிக்கூடாது என்றும் ராஜேந்திர பாலாஜிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.