சொந்த தொகுதியில் வெற்றிபெற வக்கு இல்ல.. திமுக ஆட்சியை கலைப்பியா..?? அண்ணாமலையை டரியல் ஆக்கிய கேசிஆர்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 12, 2022, 6:36 PM IST

தனது சொந்த தொகுதியில்  போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அண்ணாமலை திமுக ஆட்சியைக் களைப்பேன் என்று பேசுவதா? என தெலுங்கானா மாநில ஆளுநர் சந்திரசேகர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.


தனது சொந்த தொகுதியில்  போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அண்ணாமலை திமுக ஆட்சியைக் களைப்பேன் என்று பேசுவதா? என தெலுங்கானா மாநில ஆளுநர் சந்திரசேகர் ராவ் கேள்வி எழுப்பியுள்ளார். முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கவிழ்த்து விடுவோம் என மிரட்டி ஏக்நாத் ஷிண்டே அரசியல் நடத்துவோம் என அண்ணாமலை எச்சரிக்கிறார் என்றும் கேசிஆர் பாஜகவை கண்டித்துள்ளார். 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இப்படித்தான் அண்ணாமலை மிரட்டுவதா என்றும் கேசிஆர் ஆவேசம் காட்டியுள்ளார். இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறிவைத்து காய்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. எந்தெந்த மாநிலங்களில் பாஜகவின் ஆட்சி இல்லையோ அந்தந்த மாநிலங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்ப்பதுடன் பாஜக அல்லது பாஜக ஆதரவு அரசு உருவாக்கப்பட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

சமீபத்தில் மகாராஷ்டிராவில் சிவசேனாவில் பிளவை ஏற்படுத்தி உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் புதிய அணி உருவாக்கப்பட்டு பாஜகவுக்கு ஆதரவான அரசு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபோல பல்வேறு மாநிலங்களின் பாஜக வியூகம் வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது,

குறிப்பாக தென்னிந்தியாவில் பாஜக கால்தடம் பதிக்க முயற்சித்து வரும் நிலையில் தற்போது இந்த வியூகத்தை தென்னிந்திய மாநிலங்களிலும் அரங்கேற்றுவதற்கு பாஜக முயற்சித்து வருவதாக விமர்சனம் இருந்து வருகிறது. இதன் வெளிப்பாடாகவே தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் திமுகவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே புறப்படுவார் என  பேசியுள்ளார், அண்ணாமலையின் இந்த கருத்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளால் மிகவும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவை வெளிப்படையாக விமர்சித்து வருகிறார்.  

ஸ்டாலின் போலவே பாஜகவை தேசிய அளவில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கடுமையாக எதிர்த்து வருகிறார், பாஜகவுக்கு எதிராக பல மாநில கட்சிகளை ஒன்று திரட்டும் வேலையில் ஈடுபட்டு வருகிறார், சமீபத்தில்  பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திரசேகரராவ் சந்தித்தார், அதேபோல் விரைவில் தேசியக் கட்சியைத் தொடங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.  

2004 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை திரட்டி கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறார்.  இந்நிலையில்தான் சமீபத்தில் கேசிஆர் விமர்சித்த பாஜக மாநில அண்ணாமலை,  விரைவில் தெலங்கானாவில்  ஆட்சி மாற்றம் ஏற்படும் என குறிப்பிட்டிருந்தார்.

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசைக் கலைந்தது போல தமிழ்நாட்டிலும் ஆட்சி கலையும் நிச்சயம் திமுகவில் இருந்து விரைவில் ஏக்நாத் ஷிண்டே வருவார் என அண்ணாமலை எச்சரித்திருந்தார். நிச்சயம் திமுகவில்  உதயநிதியை அமைச்சராக்கும் பட்சத்தில் ஏக்நாத் சிண்டே வருவார் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அண்ணாமலை தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு குறித்து பேசியிருப்பதற்கு தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பதிலடி கொடுத்துள்ளார்.

ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க போவதாக பாஜக கூறுகிறது, தமிழ் நாட்டில் இருந்து கூட ஏக்நாத் ஷிண்டே வரப்போவதாக அண்ணாமலை அவரால் அவரின் சொந்த தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை சொந்த தொகுதியில் வெற்றி பெறமுடியாத நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியை கவிழ்க்க போவதாக கூறுகிறார்.

ஏக்நாத் ஷிண்டே அரசியல்தான்  உங்கள் அரசியலா? இதுதான் உங்களின் ஜனநாயகமா? சொல்லுங்கள்,  தெலுங்கானாவில் 103 எம்எல்ஏக்கள் வைத்திருக்கிறோம், தோழமை கட்சிகளுடன் சேர்ந்து  எங்களது எண்ணிக்கை 110 ஆக உள்ளது, எங்கள் ஆட்சியை வைப்போம் என்று அண்ணாமலை பேசுகிறார் இதுதான் நீங்கள்  அரசியல் நடத்தும் விதமா? தனது சொந்த தொகுதியில் கூட போட்டியிட்டு வெற்றிபெற முடியாத அண்ணாமலை மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கவிழ்த்து விடுவோம் என மிரட்டுவதா? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். 
 

click me!