ஆர்.எஸ்.எஸ் ட்ரவுசரில் தீ.. காங்கிரஸ் வெளியிட்ட சர்ச்சை படம் - ரவுண்ட் கட்டிய பாஜக தலைவர்கள்

By Raghupati RFirst Published Sep 12, 2022, 8:19 PM IST
Highlights

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி டிரவுசர் உடையில் தீப்பிடிப்பதை போல படத்தை பகிர்ந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்திரையை தொடங்கி உள்ளார். இந்தநிலையில் யாத்திரையின் போது ராகுல் காந்தி அணிந்து இருந்த பர்பெர்ரி டி-சர்ட்டின் விலை ரூ.41 ஆயிரம் என பாஜக சமூகவலைதளத்தில் விமர்சித்து இருந்தது. இதனை மறுத்த காங்கிரஸ் தரப்பு, பாஜகவினர் பொய்யான தகவலை பரப்புவதாக தெரிவித்தது. 

மேலும் செய்திகளுக்கு..விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி டிரவுசர் உடையில் தீப்பிடிப்பதை போல படத்தை பகிர்ந்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  குறிப்பாக பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. 

To free the country from shackles of hate and undo the damage done by BJP-RSS.

Step by step, we will reach our goal. 🇮🇳 pic.twitter.com/MuoDZuCHJ2

— Congress (@INCIndia)

'ஆம் ஆத்மி அரசின் ஒவ்வொரு துறையும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டு, கெஜ்ரிவாலின் நண்பர்களுக்கு பயனளிக்கும் வகையில் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்கள் செய்யப்படுகின்றன. முதலில் மதுபான உரிமம் ஊழல். இப்போது பேருந்துகள் வாங்கியதில் ஊழல். முதல்வர் பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஊழலும், கெஜ்ரிவாலும் ஒன்றுதான்' என்று பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..வேறு சாதி பையனை காதலித்த மகள்.. மறுத்த தந்தை எடுத்த விபரீத முடிவு - காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

Failed Education Model of Kejriwal Government stands exposed! pic.twitter.com/dR2VnyN4V2

— BJP Delhi (@BJP4Delhi)

பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, "இந்த நாட்டில் வன்முறை ஏற்பட வேண்டுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்க விரும்புகிறேன்" என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். டெல்லியில்  ஆம்ஆத்மி அரசு பேருந்து கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளது குறித்து சிபிஐ விசாரிக்கு மாநில ஆளுநர் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

click me!