அடுத்து இந்த அமைச்சர் வீட்டில் தான் அமலாக்கத்துறை சோதனை..! திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் எச்.ராஜா

Published : Aug 09, 2023, 08:46 AM ISTUpdated : Aug 09, 2023, 09:40 AM IST
அடுத்து இந்த அமைச்சர் வீட்டில் தான் அமலாக்கத்துறை சோதனை..! திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் எச்.ராஜா

சுருக்கம்

இந்துசமய அறநிலைத்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம். அமைச்சர் சேகர்பாபு ஒரு கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவர் என எச்.ராஜா விமர்சித்துள்ளார்.   

திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்

இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும் , இந்துக்களுக்கு  விரோதமாகவும் செயல்பட்டு வருவதாக கூறி திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து  திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில்  இந்து முன்னனி கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமை தாங்கினார்.  பின்பு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய எச்.ராஜா,  மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவர்களை அடித்து துரத்தவேண்டும், அதுவும் ஓட்டுக்கள் மூலம் நாம் செய்ய வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி அமையும் , அப்போது அவர்கள் அனைவரும் தூக்கி எறியபடுவார்கள்.  

சேகர்பாபுவை நீக்க வேண்டும்

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமான , அராஜக ஆட்சி நடக்கிறது. திராவிடமாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இது தான் என தெரிவித்தார். திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு , மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் நேரு , வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? என கூறி இருக்கிறார். என்ன முட்டாள் தனமான பேச்சு, திராவிடமாடல் ஆட்சி இந்து இயக்கத்திற்கும், தேசிய இயக்கத்திற்கும் விரோதமாக செயல்படுவது உறுதியாகி உள்ளது. மேலும் இந்துசமய அறநிலைத்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும்.

அமலாக்கத்துறை சோதனை அடுத்து எங்கே.?

தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம். அமைச்சர் சேகர்பாபு ஒரு கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவர், அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும். தமிழகத்தில் அடுத்த அமலாக்கதுறை சோதனை சேகர் பாபு வீட்டில் தான் நடக்கும் என்றார். இந்து அறநிலைதுறைக்கு இந்து வெறியர்கள் தான் அமைச்சராக இருக்க வேண்டும்.  தற்போது தமிழகத்தில் நடப்பது கிரிமினல் ஆட்சி, இந்துக்களுக்கு எதிரான ஆட்சி, ஆகையால் உடனடியாக இதை அகற்ற வேண்டும். குறிப்பாக திருடன் கையில் சாவியை கொடுத்தது போன்று, இந்துக்கள் கோயில்களில் உள்ள நகை, பணம், நிலம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

குடும்பத்தை பற்றி சிந்திக்கும் முதல்வரே.. அதிமுகவை சீண்ட வேண்டாம்.. ஸ்டாலினுக்கு வார்னிங் கொடுத்த இபிஎஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய அரசு பதவி! விஜய் முடிவின் பின்னணி இதுதான்! பரபரப்பு தகவல்!
Government scheme: பெண் குழந்தைகளுக்கு அரசு தரும் ரூ.50,000.! யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?