பழனி கோசாலையை சிப்காட்டாக மாற்றும் அதிகாரத்தை யார் கொடுத்தது? எச்.ராஜா சீற்றம்

By Velmurugan sFirst Published Aug 8, 2023, 2:44 PM IST
Highlights

பழனியில் உள்ள கோசாலையை எப்படி சிப்காட் ஆக மாற்றுவீர்கள் ? யார் உங்களுக்கு இந்த அனுமதியை கொடுத்தது என திருச்சியில் எச். ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலின் கிழக்கு கோபுரத்தில் இரண்டாவது அடுக்கு சுவரில் கொடுங்கை சுவர் கடந்த 5ம் தேதி  சேதமடைந்து நள்ளிரவில் கீழே விழுந்தது. இதனிடையே அறநிலைத்துறை சார்பாக ரூபாய் 97 லட்சம் மதிப்பில் பராமரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரத்தில் விழுந்த பகுதிகளை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் எதற்கும் தகுதியானவர் அல்ல. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கோபுரத்தை ஆய்வு செய்து முழுமையாக சரி செய்திருக்க வேண்டும். இதனை  தவறிய ஜெயராமனை கண்டிப்பாக தகுதி நீக்கம் செய்ய வேண்டும். திமுகவில் பல இலக்கா இல்லாத மந்திரிகள் உள்ளனர். ராமராஜியம் இது என்று சொன்ன ராஜேந்திரன் என்கிற தமிழக காவல் துறையை சேர்ந்தவரை ஸ்டாலின் அரசு டிஸ்மிஸ் செய்து உள்ளனர். ஏன் இதே போல் கிறிஸ்துவர் அதிகாரிகளை நீக்கவில்லை என்பதே என் கேள்வி.

சாலையோரம் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லைப்போட்டு கொலை - நீதிமன்றம் அதிரடி

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஸ்டாலின் அரசாங்கம் ஆட்டம் போட்டுக்கொண்டு இருந்தது. 60 நாளுக்கு பின்னர் உச்சநீதி மன்றத்தில் அரை வாங்கிக்கொண்டு இப்போது அமைதியாக உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் தாமரை கோலங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்காத தமிழ் செல்வி என்கிற மேலாளர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக அவரை வேலையை விட்டு  நீக்க வேண்டும், இல்லையென்றால் ஒட்டுமொத்த பாஜகவும் சேர்ந்து எதிர்ப்போம்.

சிலை கடத்தலோடு தொடர்பில் இருப்பவர்கள் எப்படி இந்து சமய துறையில் இருக்க முடியும்? இந்து சமய அறநிலைத் துறையில் அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகளாக கண்டிப்பாக இந்துக்கள் மட்டுமே இருக்க வேண்டும். திமுக ஆட்சியை விட்டு போகும் போது கோவிலில் நகைகள், பணம், நிலம், சொத்துக்கள் இருக்க கூடாது என்பதே இவர்களது எண்ணம். பழனியில் உள்ள கோசாலையை எப்படி சிப்காட் ஆக மாற்றுவீர்கள்? யார் உங்களுக்கு இந்த அனுமதியை கொடுத்தது?

திண்டுக்கல்லில் பட்ட பகலில் அடுத்தடுத்து 2 பேர் வெட்டி படுகொலை; காவல் துறை விசாரணை

தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் மீது அக்கரை இல்லாத அல்லேலூயா பாபு எப்படி அறநிலை துறையையும்,  அரங்கநாதரையும் பார்க்க முடியும்? கோவில் உண்டியலை நம்பியே அறநிலைய துறை கோவில்களை கையில் எடுத்தது. ஆனால் கோவில்களுக்கு என்று அறநிலையத்துறை ஏதும் செய்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என தெரிவித்தார்.

click me!