செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணையால் திமுக அமைச்சர்களுக்கு ரத்த அழுத்தம் கூடி விட்டது- செல்லூர் ராஜூ

By Ajmal Khan  |  First Published Aug 8, 2023, 12:30 PM IST

அமலாக்கத் துறையினர் எப்ப வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம் என்ற பயமும் பதற்றமும் திமுக அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 


அதிமுக மாநில மாநாடு

அதிமுக மாநாடு மதுரை விமான நிலையம் அருகே இருக்கக்கூடிய வளையங்குளம் பகுதியில் வருகிற 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதிமுக மாநாடு நடைபெற உள்ள நிலையில் அதிமுகவினர் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றனர்.  இந்தநிலையில், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அதிமுக அமைச்சருமான செல்லூர் ராஜு,  

Latest Videos

undefined

தனது தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அழைப்புகள் கொடுத்து வரவேற்கும் வண்ணமாக அழைப்பிதழ் ஒன்று தயார் செய்து அதை இன்று அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பிரார்த்தனை செய்தார்.  இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,  மதுரையில் நடைபெறுகிற மிக முக்கியமான ஒரு மாநாடாக இந்த மாநாடு அமையும்.  மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிர்வாகிகள் மூலமாக அழைப்புகள் கொடுத்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க உள்ளோம். 

செந்தில் பாலாஜியிடம் விசாரணை

மாநாட்டிற்கு வரக்கூடிய அனைத்து மக்களுக்கும் தேவைப்படக்கூடிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று வரக்கூடிய அனைவருக்கும் உணவு வழங்கக் கூடிய வகையில் மூன்று இடங்களில் உணவு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து இடையூறு இல்லாமல் வாகனங்களை எளிதில் வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அமலாக்கத்துறை சோதனையால் ஏற்கனவே தூங்காமல் இருந்த அனைத்து அமைச்சர்களும் மேற்கொண்டு தற்பொழுது பதற்றம் அடைந்து ரத்த அழுத்தம் கூடியிருக்கும். கிருஷ்ணன் வாயை திறந்தால் உலகமே தெரியும் என்பார்கள் அதேபோல் செந்தில் பாலாஜி வாயை திறந்தால் திமுகவின் முப்பதாயிரம் கோடி ரூபாய் ஊழல் தெரிந்துவிடும் என கூறினார். 

குதிரைக்கு கடிவாளம்

அண்ணாமலை தங்களை விமர்சித்தது தொடர்பானகேள்விக்கு???. எந்த கவலையும் அடையப் போவதில்லை. நான் ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் என்று அன்றே சொல்லி விட்டேன். தற்பொழுது எங்களுடைய அனைத்து நோக்கமும் 20 ஆம் தேதி நடைபெறக்கூடிய மாநாடு சிறப்பாக அமைய வேண்டும் என்பதாக மட்டுமே தான் இருக்கும். குதிரைக்கு கடிவாளம் போட்டது போல எங்களது எண்ணமும் நோக்கமும் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது மட்டுமே என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

செந்தில் பாலாஜியிடம் தொடரும் விசாரணை..! அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு திடீரென வந்த மருத்துவர்கள்- காரணம் என்ன.?

click me!