அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னதாக செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.
அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றமானது செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்த நிலையில், கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இருதய பகுதியில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
undefined
இதனையடுத்து செந்தில் பாலாஜி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து புழல் சிறையில் செந்தில் பாலாஜி அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வந்தது. உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என நடைபெற்ற வழக்கில் செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரித்து வருகிறது. நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து இன்று காலை செந்தில் பாலாஜியின் உடல் நிலையை பரிசோதிக்க மருத்துவர்களை அமலாக்கத்துறை அழைத்து இருந்தது. இதனையடுத்து மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து அமலாக்கத்துறை விசாரணையை தொடங்கியுள்ளது. நாளொன்றுக்கு 50 என்ற கேள்வி கனக்கில் விசாரணையை நடத்தி வருகிறது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வங்கியில் வரவு வைக்கப்பட்ட தொகை, புதிதாக கட்டப்படும் வீட்டில் மொத்த மதிப்பு, வீடு கட்ட பணம் உள்ளிட்டவைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.