சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க தடையாக இருப்பது ஏன் - ஆளுநருக்கு பொன்முடி கேள்வி

By Velmurugan s  |  First Published Oct 25, 2023, 2:37 PM IST

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உண்மையாகவே ஆளுநர் மீது அக்கறை இருந்தால் சங்கரையாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்ற பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கோரிக்கை விடுத்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆளுநர் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூற தவறியதாக, சுதந்திரப் போராட்ட வரலாற்றையே தெரிந்தவர் போல ஆளுநர் கருத்தை கூறி இருக்கிறார். அதற்கான பதிலை நேற்று திமுக நாடாளுமன்ற குழுவினுடைய தலைவர் டி ஆர் பாலு தெரிவித்திருக்கிறார்.

ஆளுநருக்கு உண்மையாகவே சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகம் ஆட்சி குழு ( syndicate ) மற்றும் ஆட்சி பேரவை ( senate ) இரண்டும் சேர்ந்து 18.8.23 லும் 20.9.23 அனுப்பிவைக்கப்பட்ட ஒருவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க ஆளுநர் கையெழுத்து தேவைப்படும். இந்த இரண்டு குழுக்களும் நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப்பட்ட தீர்மானம் இன்னும் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார். 

Tap to resize

Latest Videos

ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளி மாணவன்; 36 மணி நேரம் போராடி உடலை மீட்ட தன்னார்வலர்கள்

ஆளுநருக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் இருந்து சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது தொடர்பாக அனுப்பப்பட்ட கோப்புகளை உடனடியாக நிறைவேற்றி கொடுக்க வேண்டும். சங்கரய்யா மக்களுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, கல்லூரியில் படிப்புகளை நிறுத்திவிட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அவரை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது சங்கரய்யாவிற்கு வழங்கப்பட்டது. எனவே, அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவை ஏற்றுக் கொள்ளாமல், பேசியிருப்பதை கேட்டாலே சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமா இல்லையா என்று தெரியும். மேலும், மதுரையில் 2 ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. அன்றே அவருக்கு கௌரவ பட்டம் வழங்குவதற்கான கோப்புகளில் ஆளுநர் கையெழுத்து இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். 

கள்ளக்காதல் விவகாரத்தில் இளநீர் வியாபாரி படுகொலை; 2 மணீ நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீஸ்

இறுதியாக பேசிய அவர், 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் இணையதளம் வாயிலாக கையெழுத்து போடலாம் என்று கேட்டு கொள்வதாக தெரிவித்தார்.

click me!