கருணாநிதி குறித்து அவதூறு.. நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீடு புகுந்து தட்டித்தூக்கிய போலீஸ்..!

By vinoth kumar  |  First Published Oct 25, 2023, 2:08 PM IST

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளார். 


சமூக வலைதளத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பிய சேலத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் குமரேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பற்றி சமூக வலைதளத்தில் குமரேசன் என்பவர் அவதூறு செய்தி பரப்பி உள்ளார். அவதூறு பரப்பியது குறித்து திமுக நிர்வாகி முருகேசன் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி குமரேசன் என்பவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து கருங்கல்பட்டியை சேர்ந்த 56வது வார்டு திமுக செயலாளர் முருகேசன் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி... மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாம் தமிழர் கட்சியில் தெற்கு தொகுதி முன்னாள் துணை தலைவராக இருந்த குமரேசனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. கூலிப்படையை வைத்து மனைவியை போட்டு தள்ளிய கணவர்.. சிக்கியது எப்படி?

 

click me!