நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா? - அண்ணாமலையின் கிண்டலான ரியாக்‌ஷன்

By Ajmal KhanFirst Published Oct 25, 2023, 1:31 PM IST
Highlights

தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல, இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆளுநரை விமர்சித்த திமுக

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி- திமுக இடையிலான மோதல் தொடர்பாக கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக பொருளாளர் டி.ஆர். பாலு ஆளுநரை ஏக வசனத்தில் ஒருமையில் திட்டியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியமான தலைவர்கள் குறுகிய வட்டத்திற்குள் அடைத்து விட்டனர். தென் தமிழகத்தில் குருபூஜைகளுக்கு செல்வது வார் ஜோனுக்குள் செல்வது போல, இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வது போல உள்ளது.

ஆளுநரின் கருத்து எந்த வகையிலும் தவறு கிடையாது.  திமுக சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேரின் பெயர்களை பாடப்புத்தகங்களில் சேர்த்தது என வெள்ளை அறிக்கை தர வேண்டும். சுதந்திர போராட்ட வீரர்களை இருட்டடிப்புச் செய்து விட்டு, திராவிட தலைவர்களின் பெயர்களை வைக்கின்றனர். எந்த ஊரில் பேருந்து நிலையம் திறந்தாலும், கலைஞரின் பெயரை வைக்கின்றனர்.

ஆளுநர் பேசியது தவறு இல்லை

ஆளுநரை டி.ஆர். பாலு ஒருமையில் பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். டி.ஆர். பாலுவிற்கு திட்டுவது மட்டுமே முழு நேர வேலை. ஆளுநரை வம்பிற்கு இழுக்கும் போக்கை திமுகவினர் விட்டு விட வேண்டும். ஆளுநர் தனது வேலையை செய்கிறார். ஆளுநரை ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி என டி.ஆர்.பாலு  கொச்சைபடுத்த முயற்சிக்கிறார். டி.ஆர். பாலு எம்.பி. சீட் கிடைக்க வேண்டும் என்ற நப்பாசையில் பேசுகிறார். கவிஞர் பாரதியார் பற்றி பேச திமுக தலைவர்களுக்கு அருகதை இல்லை. பாரதியாரை திமுகவினர் பலகாலம் ஏற்று கொள்ளவில்லை. பாரதியாரை சாதி வட்டத்திற்குள் அடைக்க முயற்சி செய்தனர். பாரதியாரை மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை என  அவரது வீட்டை அரசுடமை ஆக்கினார்கள்.

டாக்டர் பட்டம்- ஆளுநர் மறுக்க வாய்ப்பில்லை

வாரணாசியில் உள்ள பாரதியார் வாழ்ந்த வீடு பெட்டி கடை மாதிரி இருக்கிறது. முதலமைச்சர் பாரதியார் பற்றி டிராமா போடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். காந்தியை அதிகமாக தூக்கி பிடிப்பவர்கள் நாங்கள் தான். கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்கவில்லை. கோட்சேவை யாரும் தூக்கி பிடிக்க கூடாது.  சங்கரய்யா முக்கியமான மனிதர். மாற்று சித்தாந்தம் இருந்தாலும், தமிழகத்தின் மூத்த தலைவர். அவருக்கு டாக்டர் பட்டம் தர கவர்னர் மறுக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளர் என்று முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜியின் கருத்து தொடர்பான கேள்விக்கு, சிரிப்பு தான் எனது பதில் என சிரித்தபடி பதிலளித்தார்.

எடப்பாடி பழனிசாமி பிரதமர் வேட்பாளரா.?

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் பதவிக்கு என மரியாதை உள்ளது. மூன்றாவது முறையாக மோடி தான் பிரதமர் வேட்பாளர். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமர் கனவு இருக்கலாம். தமிழர் ஒருவர் பிரதமர் வேட்பாளராக வேண்டும் என்றால், அதற்கு தமிழகத்தில் பாஜக ஆட்சி வர வேண்டும். பாஜகவில் யார் வேண்டுமானாலும் வளர தடையில்லை. ஆனால் ஒரே பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தான். பிரதமர் தமிழர்களை உயர்த்தி அழகு பார்க்கிறார் என அண்ணாமலை தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அமைச்சர்களுக்கான சொகுசு இல்லங்கள் அறிவாலய அறக்கட்டளையில் வாங்கப்பட்டதா? உழைத்து சம்பாதித்ததா? சீறும் வானதி

click me!