மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கவே ஆளுநர் ரவி இப்படி செய்கிறார்.. அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு!

By vinoth kumarFirst Published Dec 1, 2023, 12:27 PM IST
Highlights

மசோதாக்களை காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை? 

மீண்டும் நிறைவேற்றிய மசோதாக்களை காலதாமதப்படுத்தவே உள்துறை அமைச்சகம் மூலமாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

சென்னை லயோலா கல்லூரியில், கணக்கீட்டு அறிவியலில் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் சட்டதுறை அமைச்சர் ரகுபதி பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் கல்லூரி முதல்வர் துறை சார்ந்த தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி;- 10 மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம். என்னென்ன காரணங்களுக்காக மசோதாவை  திருப்பி அனுப்பினேன் என்று கூறினாரோ, அதற்குரிய தகுந்த விளக்கங்களையும் கூறி மசோதாவை நிறைவேற்றினோம். தற்பொழுது தான் ஒப்புதல் தர வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையிலே உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளோம் என்று கூறியிருக்கிறார். 

Latest Videos

இதையும் படிங்க;- இந்த அமைச்சரை நீக்குங்கள்! இல்லன்னா எதையாவது சொல்லி உங்கள் ஆட்சிக்கே பங்கம் விளைவிப்பார் முதல்வரே! பாஜக.!

மசோதாக்களை காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். தன்னிடம் இருக்கக்கூடிய அதிகாரம் பறிபோய் விடுமோ என்ற எண்ணம் ஏன் அவர்களுக்கு வருகிறது என்று தெரியவில்லை? மாநில அரசுக்கு துணைவேந்தரை நியமிக்க கூட அதிகாரம் அளிக்கக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. 

இதையும் படிங்க;-  மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! இதற்கு முதல்வர் தொகுதியே உதாரணம்.!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், ஒரு குழுவை நியமிக்கிறோம். அதில் ஆளுநரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டிகேட்டின் பிரதிநிதியும் இருக்கிறார். அந்த தேடுதல் குழு தான் மூன்று பேரை பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். அதை ஆளுநர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறுவதில் என்ன தவறு இருக்கிறது. மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அனுப்பியிருக்கிறோம் என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

click me!