தெலங்கானா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 3 லிருந்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
குஷ்பு பேசியது தவறா.?
காங்கிரஸ் கட்சி சார்பாக ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சென்னையில மழை பாதிப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர், சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இப்போது தான் அதிக மழை பெய்து வருவதாகவும், ஒருசில இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருவதோடு, நிவாரண பணிகள் துரிதப்படுத்தியுள்ளதாக கூறினார்.
நடிகை குஷ்புவின் சேரி வார்த்தை தொடர்பான் கேள்விக்கு பதில் அளித்த அவர். குஷ்புவின் பேச்சில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை என்றாலும் அந்த பேச்சு குறித்து முழுவிபரங்கள் தெரியவில்லை என கூறினார்.
எத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி
கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன், தமிழகத்தில் திமுக, அதிமுக விற்கு அடுத்தபடியாக 3வது பேரியிக்கமாக காங்கிரஸ் கட்சி உள்ளதால், மக்கள் காங்கிரஸ் கட்சி மீது பற்றும் ஆதரவும் தந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் 3 லிருந்து 4 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், நாடாளுமன்ற தேர்தலை பொதுத்தவரை ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி, பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் ஈவிகேஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்