பாஜகவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபயணம்; தனி நபராக களம் இறங்கும் காயத்ரி ரகுராம்

By Velmurugan sFirst Published Jan 14, 2023, 6:29 PM IST
Highlights

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் பாஜகவில் பெண்கயை அவமானப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவில் இணைந்து கட்சி பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், மாநிலத் தலைவர் அண்ணாமலையின் தலைமையில் கட்சியில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு என தெரிவித்ததைத் தொடர்ந்து மாநிலத் தலைவர், காயத்ரி ரகுராம் இடையேயான பிரச்சினை சலசலப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். அதன்படி அவர் அளித்த விலகல் கடிதத்தை கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்றுக் கொண்டதத் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடை பெற்றார்.

பழனி தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க முன்பதிவு விவரங்கள் வெளியீடு

இந்நிலையில், காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாஜக பெண்களை அவமானப்படுத்தியதாவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் வருகின்ற 27ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன்.

தனி நபராக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவி்ல்லை. என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது.

தூத்துக்குடியில் வரதட்சணைக்காக பெண் கொலை? காவல் துறையினர் விசாரணை

இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட் பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்.

பாஜகவின் உண்மையான முகத்தை நான் முதன்முறையாகப் பார்த்தேன், பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டியதற்கு நன்றி. வளர்ப்பு மகனுக்கு இங்கு அதிகாரம் அதிகம்.  பாஜகவில் வாரிசு அரசியல் உள்ளது. பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் இங்கு அடிமைகள். பாஜகவிடம் தர்மம் இல்லை. புதிதாக சேர்ந்த அனைத்து பெண்களும் அதை விரைவில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் உன்னை பயன்படுத்தி தூக்கி எறிவார்கள். என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!