நேற்று டிஸ்சார்ஜ்.. இன்று மீண்டும் அட்மிட்டான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!

Published : Jan 14, 2023, 12:47 PM ISTUpdated : Jan 14, 2023, 01:04 PM IST
நேற்று  டிஸ்சார்ஜ்.. இன்று மீண்டும் அட்மிட்டான திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்..!

சுருக்கம்

திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன்(84) வயது மூப்பு காரணமாக அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக கடந்த 10ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டதை அடுத்து குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். இந்நிலையில், இன்று மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி