திரைப்பட அரசியல் படி திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது. ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும் ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை.
ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும், ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை;- எனக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பு ஒருவித நெருடலாக உள்ளது. இந்தியாவில் குறைந்த அளவு நபர்களுக்கு மட்டுமே இசட் பிரிவு பாதுகாப்பு உள்ளது. மத்திய உளவுத்துறை ஆய்வு செய்து சொல்லும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டமன்றத்தில் காங்கிரஸ் திமுக எம்எல்ஏக்கள் ராமாயணம் என்பது கற்பனை கதை எனவும் ராமர் கட்டுகதை எனவும் கூறி இந்துமக்கள் மனதை புண்படுத்தியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலிருத்து வெற்றி பெற்று சென்ற காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் இந்துமக்களிடம் பொதுமன்னிப்பு கேட்கும் வரை பிரச்சினையை விடபோவதில்லை.
undefined
இதையும் படிங்க;- அதிரடி அரசியல் செய்யும் அண்ணாமலைக்கு Z பிரிவு பாதுகாப்பு.. மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு..!
அதேவேளையில் கட்சியில் செய்யவேண்டிய பணியில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட பிரதிநிதி ஒருவர் உயிரிழந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. அதேவேளையில் அவரை இழந்து வாடும் குடும்பத்தினரிடையே துக்கம் மறைவதற்கு முன்பாக இடைதேர்தல் நடத்த திமுக அரசு அவசரம் காட்டுகிறது. மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு திமுகாவிற்கு இல்லை.
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்று ஆறு மாதங்களாகியும் அதன் முடிவுகளை வெளியிடாத அரசு எப்படி வேலைவாய்ப்புகளை வழங்கமுடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். திரைப்பட அரசியல் படி திரைபடத்தில் நடிகர்களுக்கு வில்லன்கள் இருப்பது போல் திமுக அரசு ஆளுநரை வில்லனாக சித்தரிக்கிறது.
இதையும் படிங்க;- பாஜகவில் இருந்து முக்கிய பிரமுகர் நீக்கம்.. அதிரடி காட்டும் அண்ணாமலை..!
ஆளுநரை வைத்து அரசியல் செய்வதாகவும் ஒவ்வொரு மாதமும் ஆளுநரை பற்றி புதுபுது பிரச்சினையை கிளப்புவது தான் திமுகவின் வாடிக்கை. திமுகவை ஆளுநரை சீண்டி வருகின்றனர். மேற்குவங்கம், கேரளாவை போல் ஆளுநர் செய்தியாளர்களை நேரடியாக சந்தித்தால் அரசின் மானம் நிலைகுலைந்துவிடும். 2024 தேர்தலில் பாஜக கொள்கை சார்ந்த கூட்டணி அமைக்கும் திமுகாவை போல் சந்தர்பவாத கூட்டணி அமைக்காது என அண்ணாமலை கூறினார்.