தூத்துக்குடியில் நடைபெற்ற பாஜக 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா உலகில் எங்கு தேடினாலும் இப்படியொரு கோமாளி முதல்வரை பார்க்கவே முடியாது என விமர்சனம் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பாஜக 9ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பாஜக சட்டமன்ற குழு தலைவர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா, பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தின் போது தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா பேசினார். அதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து இந்த உலகத்தில் எங்கு தேடினாலும் "இப்படி ஒரு சுடலையை காண முடியாது" - "கோமாளி பைய சுடலையை எங்கு தேடினாலும் காணவே முடியாது" என தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து மேடைப்பேச்சின் போது வசைபாடினார்.
தேனியில் நீதிமன்றம் அருகே பெண் மீது காரை ஏற்றி கொல்ல முயற்றி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
மேலும் ஐபிஎஸ் படித்த அண்ணாமலை தான் எந்த நாட்டிற்கு சென்றாலும் வேஷ்டி சட்டையில் தமிழர் என்ற அடையாளத்தோடு செல்வதாகவும், தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்கள "சிங்கப்பூர்லே கூப்பிட்டாஹோ...! ஜப்பான்ல கூப்பிட்டாஹோ...!" என "கோட் சூட்டில் போறீங்களேடா...? என தமிழக முதல்வர் குறித்து வசை பாடினார்.
பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்த பள்ளி மாணவி; 2 ஆண்டுகளுக்கு பின் பெண் கைது
மேலும் கள்ள சாராயம் குடித்து தமிழகத்தில் 22 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கிடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.