Breaking News : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

Published : Jun 13, 2023, 09:16 AM ISTUpdated : Jun 13, 2023, 09:27 AM IST
Breaking News : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

சுருக்கம்

செந்தில் பாவாஜியின் உறவினர்கள். நண்பர்கள் வீடுகளில் நடைபெற்ற 8 நாட்கள் சோதனையை தொடர்ந்து தற்போது அவரது கரூர் வீட்டிலும், சென்னை பட்டினப்பாக்கம் அரசு பங்களாவிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 8 நாட்கள் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது சென்னையில் பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லம்,  கரூரில் உள்ள இல்லத்திலும் அமலாக்கதுறை சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருமான வரித்துறையினர் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் இல்லத்தில் மட்டுமே வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தவில்லை. இந்த நிலையில் வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் தான் அமலாக்கத்துறை நேரடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!