Latest Videos

அமலாக்கத்துறை திடீர் சோதனை..! வாக்கிங்கை பாதியில் முடித்து அவசரமாக டாக்சியில் வீடு திரும்பிய செந்தில் பாலாஜி

By Ajmal KhanFirst Published Jun 13, 2023, 10:10 AM IST
Highlights

என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார்கள், என்ன தேடுகிறார்கள் என தெரியவில்லை. சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் 8 நாட்கள் தொடர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை கடந்த சில தினங்களுக்கு முன்பாக முடிவடைந்த நிலையில்  தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை மற்றும் கரூரில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த முறை பாதுகாப்பு இல்லாமல் சோதனை செய்ய வந்த அதிகாரிகளுக்கும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இன்று மத்திய பாதுகாப்பு படை உதவியோடு அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

Breaking News : அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை திடீர் சோதனை

அமலாக்கத்துறை சோதனை

சென்னையில் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் அரசு இல்லம் அமைந்துள்ள பசுமை வழிச்சாலையில் தங்கியிருக்கும் செந்தில் பாலாஜியின் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெறும் சமயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் இல்லை. சிறிது நேரத்தில் வீட்டிற்கு திரும்பியவர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது கடந்த முறை வருமான வரித்துறை சோதனை போது தகவல் தெரிவிக்கவில்லையென கூறினீர்கள் தற்போது தகவல் தெரிவித்தார்களா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், எனக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நடை பயிற்சிக்காக வெளியே சென்றிருந்தேன்.

நடை பயிற்ச்சி சென்ற செந்தில் பாலாஜி

தகவல் சொன்னாங்க.. கூட இருந்த நண்பர்களை அனுப்பி விட்டு அப்படியே வந்து விட்டேன். வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டது. தற்போது சோதனை என நண்பர்கள் கூறினார். எனவே நடைபயிற்சியை பாதியில் முடித்து விட்டு டாக்சி பிடித்து வந்ததாக கூறினார்.  என்ன நோக்கத்திற்காக வந்துள்ளார்கள், என்ன தேடுகிறார்கள் என தெரியவில்லை. சோதனை முடியட்டும் என தெரிவித்தார். வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தான் அமலாக்க துறை சோதனை நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், வருமான வரித்துறை சோதனையின் முடிவில் என்ன? என்ன? எடுக்கப்பட்டுள்ளது என கையெழுத்து போட்டு கொடுத்துள்ளனர்.

முழு ஒத்துழைப்பு கொடுப்போம்

எனவே அதில் என்ன இருக்கோ அது தானே எடுத்து இருக்க முடியும். தற்போது நடைபெறும் சோதனை தொடர்பாக முழு விவரம் கிடைக்கவில்லை. அதிகாரிகள் எனக்காக காத்துள்ளனர். அதிகாரிகளுக்கு உரிய தகவல் கொடுக்க வேண்டும் . சோதனை முடிந்த பிறகு தகவல் தெரிவிக்கிறேன். அதிகாரிகள் கேட்கும் தகவலுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க தயார் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என செந்தில் பாலாஜி கூறினார். 

இதையும் படியுங்கள்

என்ன நடந்தாலும் பாஜக, பாமகவோடு எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது- அடித்து கூறும் திருமாவளவன்

click me!