அதிகாரிகள் அமைச்சரிடம் பொய்யான தகவலை வழங்குகின்றனர் - டெட்ரா பேக் குறித்து தங்கமணி கருத்து

By Velmurugan s  |  First Published Jul 20, 2023, 10:27 PM IST

டெட்ரா பேக் திட்டத்தில் மது விற்பனையில் கலப்படம் வரும் என கடந்த அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் சொன்ன தகவல்கள் காரணமாக தான் கொண்டு வரப்படவில்லை. அதிகாரிகள் தவறான தகவல்களை மதுவிலக்கு துறை அமைச்சரிடம் கூறுவதாக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு


தமிழகம் முழுவதும் திமுக அரசின் விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் அதிமுகவினர் மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் முன்னாள் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்பாட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, திமுக அரசின் 2 ஆண்டு காலத்தில் மின்கட்டண உயர்வு, சொத்து வரி மற்றும் விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்கள் முதல் மேல்மட்ட மக்கள் வரை அனைவரும் பாதிப்பு அடைந்துள்ளனர். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக மாநில அமைச்சர் வரவேற்பை தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டது கண்டிக்கத்தக்கது. 

Tap to resize

Latest Videos

"ஸ்டாலினை மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம்" - அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்

நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்து கொண்டு மத்தியிலும் காவிரி பிரச்சினை பற்றி திமுக அரசு பேசுவதில்லை. கர்நாடக மாநில அரசிடம் பேசியும் தண்ணீர் பெறவில்லை. எதிர்கட்சிகள் இந்தியாவில் இருந்து கொண்டு  பாகிஸ்தானில் உள்ளது போன்று எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் வைத்துள்ளனர். திமுக அரசு  நாடாளுமன்ற தேர்தலை முன் நிறுத்தி செப்டம்பர் மாதம் முதல் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வழங்க இருப்பதாக தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, மதுபாட்டில்கள் டெட்ரா பேக் திட்டம் கலப்பட மதுவுக்கு வழிவகுக்கும் என்று முந்தைய ஆட்சியில் அதிகாரிகள் தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் டெட்ரா பேக் கொண்டு வரவில்லை. ஆனால் அதிகாரிகள் இப்போது இருக்கும் அமைச்சரிடம் தவறான தகவலை தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூரில் டீக்கடைக்குள் லாரி புகுந்து விபத்து; 3 பேர் பலி, 5 பேர் படுகாயம் 

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றும். அதிமுக அழுத்ததின் காரணமாக தான் திமுக அரசு பெண்களுக்கான உரிமைத் தொகையை வழங்க உள்ளனர். அதிலும் நாடாளுமன்ற தேர்தலை முன் நிறுத்தி வழங்க உள்ளனர். அதிலும் பல்வேறு கட்டுபாடுகள் விதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார். 

தொடர்ந்து பேசுகையில், மின்சார துறையில் மின்மாற்றி கொள்முதலில் 400 கோடி ரூபாய் ஊழல் நிகழ்ந்து இருப்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் புகாருக்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

click me!