100 கோடி சொத்து பத்திர பதிவு ரத்து செய்யப்பட்டதில் நடந்தது என்ன.? - நயினார் பாலாஜி விளக்கம்

By Ajmal Khan  |  First Published Jul 20, 2023, 4:38 PM IST

100 கோடி மதிப்பிலான சொத்து பத்திர பதிவு ரத்து செய்யப்பட்டது, அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுத்த நடவடிக்கை என பாஜக இளைஞர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் பாலாஜி தெரிவித்துள்ளார், 


100 கோடி ரூபாய் சொத்து பத்திர பதிவு ரத்து

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரனின்  மகனும் பாஜக இளைஞர் அணியின் மாநிலத் துணைத் தலைவர் நயினார் பாலாஜி என்பவர், சென்னை - விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பாலாஜி பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. புகார் குறித்து 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரப் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருந்த நிலையில்,

Tap to resize

Latest Videos

தற்போது பத்திரப் பதிவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் உறுதியானதையடுத்து நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் அதிரடியாக பத்திரப்பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்

இந்தநிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள நயினார் பாலாஜி, சென்னையில் உள்ள சொத்துக்கு  ராதாபுரத்தில் கிரைய ஒப்பந்தம் செய்திருந்தேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 77 ஏ பிரிவை பயன்படுத்தி எனது பதிவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த பத்திர பதிவு தவறாக ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக எங்களை நீதிமன்றத்திற்கு நாட சொல்லிவிட்டு தற்போது இதை ரத்து செய்துள்ளார்.

விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஏற்கனவே தடையில்லா சான்று என் ஓ சி வாங்கியுள்ளோம். இளையராஜா என்பவரும் மோசடியான நபர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ரத்து செய்வதற்கு முன்பு என்னிடம் எதுவும் கேட்கவில்லை. இந்த நடவடிக்கை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்வோம். இந்த விவகாரத்திற்கு எனது தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென நயினார் பாலாஜி தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகனின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப் பதிவு ரத்து!

click me!