கடந்த அதிமுக ஆட்சியில் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் காலத்தில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, அமைச்சரின் உதவியாளர் செண்பகமூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜராகினார். மேலும், கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது. தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் நீதிபதி ஜனவரி 7ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில், அமைச்சர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை விடுதலை செய்து உத்தரவிட்டது.