அழைப்பு விடுத்த அமித்ஷா - புறக்கணித்த எடப்பாடி; ஆர்பி உதயகுமாரை வழி மறித்த காவல்துறையால் பரபரப்பு.!

By Velmurugan s  |  First Published Jul 29, 2023, 9:12 AM IST

ராமேஸ்வரத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையால் தொடங்கப்பட்ட பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை காவல் துறையினர் திடீரென வழி மறித்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி உள்ளார். நேற்று மாலை தொடங்கிய இந்த பாத யாத்திரையை உள்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதற்காக பாஜக கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இறுதி நேரம் வரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. நேற்று மதியம்  எடுக்கப்பட்ட முடிவின்படி அமித்ஷா அழைப்பை ஏற்று அதிமுக சார்பில் ஆர்பி உதயகுமாரை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்புவது எனவும், எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் கூறப்பட்டது.

Tap to resize

Latest Videos

undefined

காதலை பிரித்து வேறொரு நபருடன் கட்டாய திருமணம்; காதலி, காதலன் அடுத்தடுத்து தற்கொலை

இந்த நிலையில், நேற்று மாலை அமித்ஷாவை வரவேற்கவும், அவரை சந்தித்து பேசவும் அதிமுக சார்பில் சென்ற முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமாரை வழிமறைத்த தமிழக காவல்துறையினர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நீங்கள் மட்டும் தான் செல்ல வேண்டும். உங்களுடன் வரும் கட்சியினருக்கோ, மற்ற நிர்வாகிகளுக்கோ அனுமதி வழங்க முடியாது என அவரிடம் கூறினர்.

கோவையில் நகைக்காக பெண் கழுத்தை நெரித்து கொலை? காவல் துறை விசாரணை

இதனை அடுத்து சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பாஜக கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் சந்திக்க சென்ற முன்னாள் அமைச்சரை நடுவழியில் நிற்க வைத்த திமுக அரசின் காவல்துறை செயலால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

click me!