கடலூர் மாவட்டம் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் - திண்டிவனம் சாலையில் அக்கட்சி தொண்டர்கள் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் விளை நிலங்களில் என்எல்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில் அறுவடை காலம் வரை பொருத்திருக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தும், அதனை ஏற்க மறுத்து என்.எல்.சி தொடர்ந்த தங்களது பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிறுவனத்தை முற்றுகையிடவும் நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
undefined
அன்புமணி கைது எதிரொலி; கடலூர் மாவட்டத்தில் பேருந்து சேவை நிறுத்தம் - பொதுமக்கள் அவதி
அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் - சென்னை புறவழிச் சாலையில் திண்டிவனம் நகர பாமகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை திண்டிவனம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையிலான காவல் துறையினர் அப்புறப்படுத்தி கைது செய்து பேருந்து மூலம் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
கிருஷ்ணா நதியா? முதலை பண்ணையா? மனிதர்களை பார்த்ததும் கூட்டம் கூட்டமாக ஆற்றுக்குள் பாய்ந்த முதலைகள்
மேலும் திண்டிவனத்தில் பரபரப்பான சூழல் நிலவுவதால் முக்கிய இடங்களில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதே போன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் ஏராளமான பாமக தொண்டர்கள் குவிந்துள்ளால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் ஆங்காங்கே பாமகவினர் பாமக தலைவர் அன்புமணி ராமதாசை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.