என் மண்.. என் மக்கள் என்ற தலைப்பில் அண்ணாமலை நடைபயணத்தை தொடங்கவுள்ள நிலையில் இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக் கூட எடுக்க முடியாது என திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அண்ணாமலை நடை பயணம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ளும் வகையில் இன்று ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கவுள்ளார். சுமார் 6 மாத காலம் நடைபெறவுள்ள இந்த நடை பயணம் சென்னையில் ஜனவரி 11 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நடை பயணத்திற்கு என் மண்.. என் மக்கள் என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தநடை பயணத்தை பாஜக மூத்த தலைவர் அமித்ஷா தொடங்கிவைக்கவுள்ளார். நடை பயணத்தில் பங்கேற்கும் வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜகவினர் ராமேஸ்வரம் வந்துள்ளனர்
undefined
திமுக ஒட்டிய போஸ்டர்
இந்தநிலையில் அண்ணாமலையின் நடை பயணத்தை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கோவை பகுதியில் ஒட்டுப்பட்டுள்ள போஸ்டரில் இது என்னோட மண் ஒரு பிடி மண்ணக்கூட எடுக்க முடியாது என காலா படத்தில் ரஜினி கூறிய வசனம் அச்சடிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு சட்டை அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா.?
இதே போல ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுகவினர் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் பற்றி எரியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா.? நிர்வாணமாக்கப்படும் பெண்கள் உங்கள் மக்கள் இல்லையா என்ற கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் பதில் சொல்லுங்கள் மிஸ்டர் எஸ் ஆப்பிசர் அண்ணாமலை என வாசகம் அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
திமுக அரசுக்கு முடிவுரை எழுத, இராமேஸ்வரத்தில் முதல் அடியை எடுத்து வைப்போம்.! அண்ணாமலை அதிரடி டுவீட்