உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடும் அளவிற்கு பிரதமர் மோடியிடம் மட்டும் தான் உள்ளது என்று புதுச்சேரியில் திமுக பேச்சாளர் ஐ.லியோனி விமர்சித்துள்ளார்.
புதுச்சேரி அரியூர் பகுதியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு பேசுகையில், 1996ல் மாநில அந்தஸ்துக்கான தீர்மானத்தை அப்போதைய முதலமைச்சர் ஜானகிராமன் போட்டார். பின்னர் அனைத்து எம்.எல்.ஏக்களையும் டெல்லி அழைத்து சென்று வலியுறுத்தினோம்.
ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பிறகு போடப்பட்ட தீர்மானத்தை அனைத்துக் கட்சியும் ஆதரித்து தீர்மானம் கொண்டுவந்து ஒருமனதாக அரசு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது டெல்லிக்கு சென்று பரிசீலனையில் இருப்பதாக நாங்கள் நினைத்துக் கொண்டு இருந்தோம். பாராளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சுப்பராயன் கேள்வி கேட்டபோது இதுபோன்ற தீர்மானம் வரவில்லை என்று பாராளுமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
undefined
சாலை அமைப்பதற்காக தோண்டி எடுத்து வீசப்பட்ட எழும்புக்கூடுகள்; சமாதிகளை காணவில்லை என உறவினர்கள் கதறல்
இது தொடர்பாக திருச்சி எம்பி சிவா உட்பட பலர் பேசினார்கள். ஆனால் இதற்கு எழுத்துப்பூர்வமான பதில் வரவில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இதைவிட யாரும் கேவலப்படுத்த முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஆளுநர் தமிழிசை காலில் போட்டு மிதிக்கிறார். மாநில அந்தஸ்து தீர்மானத்தை தடுத்து நிறுத்தும் அதிகாரத்தை ஆளுநருக்கு கொடுத்தது யார்? ஆளுநர் மாளிகை நோக்கி மிகப்பெரிய போராட்டத்தை திமுக நடத்தும். மேலும் மக்கள் உரிமையில் கை வைத்துள்ள ஆளுநர் தமிழிசை, உள்துறை அமைச்சர், தலைமை செயலாளர், அரசு மீது உரிமை மீறல் கொண்டுவருவோம் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் ஐ.லியோனி பேசுயைில், உளுந்தே வாங்காமல் ஆயிரம் வடை சுடக்கூடிய திறமை பிரதமர் மோடியிடம் மட்டுமே உள்ளது. உங்களை யார் திருக்குறள் வாசிக்க சொன்னது...? விவசாயிகள் கூட்டத்தில் உழுதுண்டு வாழ்வார்களே வாழ்ந்தார் என கொடூரமாக பேசியதை திருவள்ளுவர் பார்த்தால் கண்ணீர் விட்டு அழுது இருப்பார். கோயம்புத்தூரில் சென்று மருதமலை முருகா அரகரா என்று கூறினார். யார் இவரை தமிழில் பேச சொன்னது ...? என கூறிய லியோனி, புதுச்சேரியில் ஆளுநரின் சொல்லுக்கு தலையாட்டி பொம்மை ரங்கசாமி போல் நான் இருக்க மாட்டேன் என நிரூபித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
ஆசிரியர்கள் தமிழில் தான் கையொப்பமிட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் பெண்மணி புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழ்நாடு பாடநூலை நீக்கிவிட்டு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தி துரோகம் செய்துள்ளார். இவர் ஒரு தமிழின துரோகி. திருவள்ளுவருக்கும், தமிழுக்கும் அவ்வளவு தொண்டு செய்து கொண்டிருப்பவர் குமரி ஆனந்தன். அவரது தொண்டுக்கு தமிழிசை துரோகம் செய்து வருகிறார். இந்த துரோகத்துக்கு முடிவு கட்ட புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைய வேண்டும்.
என்டிஏ கூட்டணி துரோகிகளின் கூட்டணி. இதற்கு மோடி தான் தலைவர். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் ஆட்சி அமைக்கும். அண்ணாமலையை கர்நாடகவில் விரட்டி அடித்தது போல் தமிழ்நாட்டிலும் விரட்டியடிப்பார்கள். புதுச்சேரியிலும் உதயசூரியன் ஆட்சி அமைத்து திராவிட மாடல் ஆட்சி நடக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40 வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் லியோனி தெரிவித்தார்.