ஓ.பன்னீர்செல்வம் அணியில் மூத்த அரசியல்வாதியும், அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமசந்திரனை கடுமையாக விமர்சனம் செய்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன் என முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆவேசமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நகர அதிமுக சார்பில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க;- எடப்பாடி பழனிசாமியை தற்குறி என விமர்சித்த பண்ருட்டி ராமச்சந்திரன்?
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் அணியில் மூத்த அரசியல்வாதியும், அந்த அணியின் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமசந்திரனை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய காமராஜ் ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்று ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்து விட்டு அம்மையார் ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது அவருக்கு துரோகம் செய்து வெளியேறினார்.
பின்னர், பாமகவில் சட்டமன்ற உறுப்பினராகவும் அதன்பிறகு தேமுதிகவிற்கு சென்று அங்கும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். அப்போதெல்லாம் எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இவருக்கு தெரியவில்லை. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு துரோகம் செய்த அவர், இன்றைக்கு எம்ஜிஆரின் கட்சியை காப்பாற்றுவதற்காக ஓபிஎஸ்ஸிடம் ஒன்று சேர்ந்துள்ளோம் என்று சொல்கிறார். இவர் ஒருவரே ஓபிஎஸ் அணியை கவிழ்ப்பதற்கு போதும் என விமர்சித்தார்.
முன்னதான ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் ஆலோசனை நடத்திய போது எடப்பாடி பழனிசாமியை தற்குறி என பண்ருட்டி ராமசந்ததிரன் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க;- திமுகவின் பி டீம் ஓபிஎஸ்.. அவங்க மகன் அமைச்சராவதை தடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை! ஜெயக்குமார்