அச்சுறுத்தும் கொரோனா.! தடுப்பூசி கையிருப்பில் இல்லை.! தயார் நிலையில் தமிழக அரசு..!- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By Ajmal KhanFirst Published Dec 23, 2022, 8:06 AM IST
Highlights

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரெண்டோம் பரிசோதனை செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை,கோவை,திருச்சி, மதுரை,ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

கொரோனா பாதிப்பு- முதல்வர் ஆலோசனை

மருத்துவமனைகளில் ஆய்வு நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தூத்துக்குடி சென்றுள்ளார். முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், கொரோனா மீண்டும் பரவல் விஷயத்தில் மத்திய அரசு அறிவிப்புக்கு முன்னதாகவே தமிழக முதல்வர் துறைசார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாக கூறினார்.  கொரான பரவலை தடுக்க தமிழக அரசு பணிகளை வேகப்படுத்தி உள்ளதாக தெரிவித்தார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ரெண்டோம் பரிசோதனை செய்ய மத்தியஅரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை,கோவை,திருச்சி, மதுரை,ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் நாளை முதல் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். 

சிங்கிள் டிஜிட்டலில் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மருந்துகள் 6-மாத காலத்திற்கு தேவையான அளவு இருப்பு உள்ளதாக தெரிவித்தவர்,  படுக்கைகள்,ஆக்சிசன் சிலிண்டர்கள் ஏற்கனவே முந்தைய கொரோனா காலகட்டத்தில் இருந்தது இருக்கின்றது எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லையென கூறினார்.  தமிழகத்தினை பொருத்தவரையில் கொரோனா தடுப்பூசி-போடும் பணியே இயக்கமாக மாற்றியதால் முதல் தவணையாக 92-சதவீதமும் இரண்டாம் தவனையாக 96-சதவீத தடுப்பூசி பணிகள் முடிந்துள்ளதாக தெரிவித்தார்.மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லையென கூறினார்.  தமிழகத்தினை பொறுத்தவரை-யில் 6-மாத காலமாக கொரொனா பாதிப்பில் உயிரிழப்பு எனபது இல்லை அதைபோல் கடந்த 10-நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு சிங்கிள் டிஜிட் என்ற அளவில் தான் உள்ளதாக கூறினார். 

கட்டுப்பாடுகள் அவசியம்

நேற்று சுமார் 4-ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட கொரொனா பரிசோதனை-யில் 4-பேருக்கு மட்டுமே கொரொனா பாதிப்பு இருந்தது. கொரோனா பரவலை பொறுத்தவரை-யில் தமிழகம் பாதுகாப்பாக இருக்கின்றது. பண்டிகை காலங்கள் தொடர்ச்சியாக வருவதால் ஏற்கனவே நடைமுறையில் உள்ள  கொரோனா விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

திமுகவுடன் நெருங்குகிறதா பாஜக? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்..!
 

click me!