திமுகவுடன் நெருங்குகிறதா பாஜக? உண்மையை போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்..!

By vinoth kumar  |  First Published Dec 23, 2022, 6:39 AM IST

பாஜக  மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம். 


அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். 

நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்;- நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கிறது.  அதனை உடனே சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன் என்றார்.  அரசுக்கு சொந்தமான இடங்களில் குவாரி அமைக்கப்பட்டால் அதனை பாஜக நிச்சயமாக எதிர்க்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் வெற்றி பெறும் என்றார். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- ஆ.ராசாவுக்கு மக்கள் தண்டனை தருவார்கள், தயாரா ? அணி திரட்டும் நயினார் நாகேந்திரன் - அதிர்ச்சியில் திமுக

மேலும், பாஜக  மற்றும் அதிமுக நிர்வாகிகளிடம் கருத்து வேறுபாடு வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் நாங்கள் இதுவரை அதிமுக கூட்டணியில் தான் நீடித்து வருகிறோம். திமுகவோடு கூட்டணி சேர்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. இதுதொடர்பாக கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்ற இரண்டாம் கட்ட தலைவர்களின் பேச்சு அவர்களின் சொந்த கருத்து. அதனை கட்சியின் கருத்தாக ஏற்றுக் கொள்ள முடியாது. 

பாஜக கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்க உள்ளது என்று அவர் எவ்வாறு கூற முடியும். பாஜக மாநில தலைவரோடு மூத்த நிர்வாகிகள், தலைவர்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ரபேல் வாட்ச் குறித்த கேள்வி எழுப்பிய போது பதிலளிக்காமல் நயினார் நாகேந்திரன் நழுவினார். 

இதையும் படிங்க;- அதிமுகவில் ஒரே சண்டை.. அதான் பாஜகவுக்கு வந்துட்டேன்.. முன்னாள் கட்சியை டேமேஜ் செய்த நயினார் நாகேந்திரன்!

click me!