உதயநிதி நாட்டுக்காக என்ன செய்தார்.!நயன்தாராவை கட்டிப்பிடித்தார்,ஹன்சிகாவை காதலித்தார்- செல்லூர் ராஜூ விமர்சனம்

By Ajmal KhanFirst Published Dec 22, 2022, 3:35 PM IST
Highlights

எம்.ஜி.ஆர்., சிலையில் காவித் கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர் அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழி பிறவி என்பேன். அவன் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவன் மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கிவிடுவேன் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டில் இபிஎஸ்

மதுரை மேற்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பரவை பகுதியில் புதிய குளியல் தொட்டி,  சுகாதார வளாகம், மின் மோட்டார் அமைப்பதற்கான பூமி பூஜை, சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சரும், அப்பகுதியின் எம்.எல்.ஏ.,வுமான செல்லூர் கே.ராஜூ துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,  கொரானா பாதிப்பு ஏற்பட்டுவரும் நிலையில் அதிமுக ஆட்சி காலத்திலேயே எல்லா பணிகளையும் செய்து முடித்துவிட்டோம். தற்போது கட்டிய வீட்டில் தி.மு.க., அரசு குடியேறியுள்ளது.

எனவே கொரோனா தொடர்பான பிரச்னையை ஏற்கனவே வைத்துள்ள உபகரணங்கள் படுக்கை வசதி உள்ளிட்டவைகளை வைத்து முறையாக கவனித்தால் போதும் என தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லை என்றால் பங்கேற்பார் என கூறினார்.

எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு

மதுரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., சிலையில் காவித் கொடியை போட்டு அவமானப்படுத்தியவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எம்.ஜி.ஆர் சமூக நீதித்தலைவர் அவர் சிலை மீது காவிக்கொடியை போட்டவன் இழி பிறவி என்பேன். அவன் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவன் மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கிவிடுவேன் என கூறினார்.  

உதயநிதி நிகழ்ச்சியில் இருக்கை ஒதுக்கீட்டில் சர்ச்சை..! அதிருப்தி தெரிவித்த ஒலிம்பிக் சாம்பியன்

உதயநிதி என்ன செய்துவிட்டார்

கலைஞர் கதை வசனம் எழுதினார், ஸ்டாலின் நன்றாக பேசுகிறார். ஆனால் நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. உதயநிதி ஸ்டாலினை காக்கா பிடிக்க செந்தில் பாலாஜி தெருக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பெயரை வைத்து வருகிறார். உதயநிதி நாட்டுக்கு என்ன செய்தார் ? நயன்தாராவை கட்டிப்பிடித்ததும், ஹன்சிக்காவை காதல் செய்ததையும் மட்டும் தான் செய்தார் என இதற்கு ஏன் அமைச்சர் பதி கொடுத்தார்கள் என செல்லூர் ராஜூ விமர்சித்தார்.

இதையும் படியுங்கள்

கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை..! சிறப்பு பேருந்துகள் இயக்கம்..! எத்தனை பேருந்துகள் தெரியுமா.?

click me!