பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? வெளியான பரபரப்பு தகவல்!!

Published : Dec 22, 2022, 08:09 PM IST
பாஜகவில் இணைகிறாரா அதிமுக முன்னாள் அமைச்சர்? வெளியான பரபரப்பு தகவல்!!

சுருக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமானதை அடுத்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியினர் சிலர் மாற்றுகட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார்.

இதையும் படிங்க: பாஜக மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல்! - திமுக மிது குற்றச்சாட்டு!

இதேபோல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர். அவரை தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவ்வாறு அதிமுகவினர் மாற்று கட்சியை நோக்கி படையெடுத்து வரும் நிலையில் அதிமுகவில் இருந்து விலகும் சிலர் கூட்டணி கட்சியான பாஜகவில் தங்களை இணைத்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுகவை சேர்ந்த நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் அன்மையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.

இதையும் படிங்க: உதயநிதி நாட்டுக்காக என்ன செய்தார்.!நயன்தாராவை கட்டிப்பிடித்தார்,ஹன்சிகாவை காதலித்தார்- செல்லூர் ராஜூ விமர்சனம்

இந்த நிலையில் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோப்பு வெங்கடாசலம் கடந்த 2021ல் சீட் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிமுகவில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது திமுகவில் இருக்கும் தோப்பு வெங்கடாசலம் இன்னும் ஒரிரு நாட்களில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!