ஆ.ராசாவை அலறவிடும் அமலாக்கத்துறை.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

By vinoth kumarFirst Published Dec 23, 2022, 7:20 AM IST
Highlights

திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக ஆ.ராசா இருந்து வருகிறார். இவர்  கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த போது மிகப்பெரிய தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சுற்றுச்சூழலுக்கான அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

திமுக எம்.பி. ஆ.ராசாவின் ரூ.55 கோடி மதிப்புள்ள 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி முதல்வர் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்  கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007-ம் காலகட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்த போது மிகப்பெரிய தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சுற்றுச்சூழலுக்கான அனுமதி வழங்க லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க;- சொத்து குவிப்பு வழக்கு.. ஆ.ராசாக்கு அதிர்ச்சி கொடுத்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம்..!

இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூர்கானில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதியை  பெற்றதற்கு லஞ்சம் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், பினாமி கம்பெனியை ஆ.ராசா தன்னுடைய குடும்பத்தார் பெயரில் இணைத்துக் கொண்டதும் தெரியவந்தது. இந்த லஞ்ச பணத்தில் கோயம்புத்தூரில் பினாமி கம்பெனி பெயரில் 55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை வாங்கியது தெரியவந்தது. 

இந்நிலையில், கோயம்புத்தூரில் பினாமி பெயரில் வாங்கப்பட்ட 55 கோடி ரூபாய் மதிப்பிலான 45 ஏக்கர் சொத்துக்களை அமலாக்கத்துறையினர் முடக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஏற்கனவே ஆ.ராசா மீது சொத்து குவிப்பு வழக்கும் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;-  நான் 2ஜி வழக்கையே பார்த்தவன்.. சொத்துகுவிப்பு வழக்கு எல்லாம் எனக்கு அசால்டு.. அசராத ஆ.ராசா..! 

click me!