அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்யை நீக்கியது செல்லும்...! அரசியலில் இனி அவர் ஜீரோ...! - ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Sep 2, 2022, 12:45 PM IST

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  இனி அரசியலில் ஓபிஎஸ் ஜீரோ என விமர்சித்தார்.
 


இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் நீதிமன்றத்தில் ஓபிஎஸ்- இபிஎஸ் என் இருவரும் மாறி மாறி வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஒற்றை நீதிபதி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதி கொண்ட அமர்வு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பால் இபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள  எடப்பாடி பழனிச்சாமி வீட்டு வாசலில் தொண்டர்கள் இபிஎஸ்க்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர. மேலும் ஒருவருக்கொருவர்  இனிப்புகளை கொடுத்து கொண்டாடினர்.

Tap to resize

Latest Videos

அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

ஓபிஎஸ் அரசியலில் இனி ஜீரோ

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழ்ச்சி அளிக்கும் தீர்ப்பு, வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பு என கூறினார்.  இரண்டு முக்கிய விஷயங்களை நீதிபதி சொல்லி இருக்கிறார்கள், ஜூலை 11ம் தேதி நடந்த செயற்குழு மற்றும் பொது குழு செல்லும் என தீர்ப்பு கூறியுள்ளனர். எனவே எடப்பாடி பழனிசாமிக்கு  இடைக்கால் பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரம் மீண்டும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.  இந்த தீர்ப்பின் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் நீக்கம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார். இனி அரசியலில் ஓ பன்னீர்செல்வத்தின் எதிர்காலம் பூஜ்யம் என  ஜெயக்குமார் விமர்சித்தார். 

இதையும் படியுங்கள்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடியுமா..? செக் வைத்த இபிஎஸ்...!
 

click me!