அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடியுமா..? செக் வைத்த இபிஎஸ்...!

By Ajmal KhanFirst Published Sep 2, 2022, 12:12 PM IST
Highlights

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என தீர்ப்பு வந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓபிஎஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
 

அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல்
 
ஒற்றை தலைமை முழக்கம் கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் இருந்து வெளியான நிலையில் தற்போது வரை முடிவு கிடைக்காமல் உள்ளது. ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டனர். அப்போது பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குரல் எழுப்பினார். அந்த பிரச்சனை பூதகரமாக ஆன நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் என தனி ,தனி அணியாக  பிரிந்தது. மேலும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக முடிவெடுக்க கூடாது என ஓபிஎஸ் வலியுறுத்தினார். ஆனால் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி என அவரது ஆதரவாளர்கள் கூற தொடங்கினர். இதனையடுத்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதிமுக அலுவலக கொள்ளை வழக்கு...! ஓபிஎஸ் நேரில் ஆஜராக சிபிசிஐடி உத்தரவா..?

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

இந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த இபிஎஸ் அணையினர் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த தீர்மானங்களை நிராகரித்தனர். மேலும் புதிய பொதுக்குழுவிற்கான தேதியும் அறிவித்தனர். இதனையடுத்து ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். மேலும் 4 மாத காலத்திற்குள் அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும் என சட்ட விதி மாற்றப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கு.. இபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!

பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியுமா..?

இந்த பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்த நிலையில், தனி நீதிபதி ஓபிஎஸ் அணிக்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதி கொண்ட அமர்வு இபிஎஸ்க்கு ஆதரவாக தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லுபடியாகும் என்றே கருதப்படுகிறது. எனவே அதிமுக  பொதுச்செயலாளர் பதவிக்கு ஓபிஎஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் 20 மாவட்ட செயலாளர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால் அதுவும் முடியாத காரியமாக மாறிவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக ஓபிஎஸ் அணி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு மாறி, மாறி தொடரப்பட்டாலும் தொண்டர்கள் யார் பக்கம்..? பொதுமக்கள் யாருக்கு ஆதரவு என்பது தேர்தலின் போது தான் தெரியவரும்..

இதையும் படியுங்கள்

வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக.. நீட்டால் மேலும் ஒரு மாணவி தற்கொலை.. ராமதாஸ்

click me!