இபிஎஸ்க்கு சாதகமான தீர்ப்பு வந்தது எப்படி? வழக்கறிஞர் இன்பதுரை கூறும் பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Sep 2, 2022, 12:15 PM IST
Highlights

நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்த தனி நீதிபதியின் உத்தரவு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஒற்றைத் தலைமை என்ற வாதத்தை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் அம்மன் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது. அதிமுகவில் ஜூன் 23-ம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.

இதையும் படிங்க;- ஜெயலலிதா மரணத்தில் பல பிரச்சனைகள் இருப்பது உண்மை தான்.. அதை இங்கே சொல்ல மாட்டோம்.. முதல்வர் பகீர் தகவல்.!

இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. 

இந்த தீர்ப்பு தொடர்பாக இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- நடந்து முடிந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்த தனி நீதிபதியின் உத்தரவு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வால் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு அதிமுக சட்ட விதிகளின் படி மட்டுமே இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகப்பு இல்லை... !தமிழகமே மயான பூமியாக மாறி வருகிறது- இபிஎஸ் ஆவேசம்

எனவே ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லும். ஒற்றை தலைமையின் நோக்கம் மற்றும் முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்கப்பட்டுள்ளது. அதிமுக சட்ட விதிகளின் படி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்ற வாதம் ஏற்கப்பட்டது. தீர்ப்பின் முழு விவரங்கள் கிடைத்தவுடன் இதுகுறித்து விரிவாக பேசுவோம் என்று அவர் கூறினார்.

click me!