நீங்கள் ஏன் இந்திய பிரதமர் ஆக கூடாது..? முதல்வர் ஸ்டாலினை தேசிய அரசியலுக்கு வர சொன்ன ஃபரூக் அப்துல்லா

By Raghupati R  |  First Published Mar 1, 2023, 7:56 PM IST

நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைய வேண்டும் என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் ஃபரூக் அப்துல்லா பேசியுள்ளார்.


திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என  பலரும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட விழாவில் கலந்து கொள்ள சென்னை வந்தார் ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா. பிறகு  செய்தியாளர் சந்தித்தார் ஃபரூக் அப்துல்லா.

Tap to resize

Latest Videos

அப்போது பேசிய அவர், ஜம்மு - காஷ்மீரில் ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே எங்கள் குரல். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பு செய்து, முன்னெடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் பிரதமர் வேட்பாளராக இருக்கக் கூடாது ? என்று பேசினார்.

இதையும் படிங்க..Erode East By-Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. வெல்லப்போவது எந்த கட்சி.? வெளியானது பரபர சர்வே முடிவுகள்

எதிர்க்கட்சிகளை இணைக்கும் முக்கிய கருவியாக ஸ்டாலின் மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். நாட்டை மேலும் வலுப்படுத்த கடவுள் அவருக்கு உதவ வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் என்று கூறினார். தொடர்ந்து விழாவில் பேசிய ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, நாம் அனைவரும் முதலில் ஒன்றிணைய வேண்டும்.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

மு.க.ஸ்டாலின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை. நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுகிறது. விழித்துக்கொள்வோம் என்று பேசினார்.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

click me!